நம்பர் மாதத்தில் சிம்ம ராசியில் குரு, செவ்வாய் பகவான் மற்றும் கேது ஆகிய 3 கிரகங்கள் சேர்ந்து சஞ்சாரம் செய்ய உள்ளன. இதனுடைய தாக்கம், யோக பலனானது மேஷ, கடகம், துலாம், தனுசு, கும்பம் உள்ளிட்ட ராசிகளுக்கு நன்மைகள் தரக்கூடியதாக இருக்கும். குறிப்பாக குரு கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு நகர்வதும் மற்ற கிரகங்களுடன் சேர்வதால் ஏற்படக்கூடிய நன்மைகளை இங்கு பார்ப்போம்.
நவம்பர் மாதத்தில் பல முக்கிய கிரகங்களின் நகர்வு மற்றும் சேர்க்கைகள் நடக்க உள்ளன. அதன் காரணமாக பல்வேறு யோகங்களும் உருவாக உள்ளன. குறிப்பாக சிம்ம ராசியின் குரு, செவ்வாய், கேது ஆகிய மூன்று கிரகங்களின் சேர்க்கை நடக்க உள்ளது. இதனுடைய தாக்கம் சில ராசிகளின் வாழ்க்கையில் பெரிய அளவில் முன்னேற்றத்தையும், வீட்டில் சுப காரியம் நடப்பது, லாபம் கிடைப்பது என நன்மைகளை வாரி வழங்கக் கூடியதாக இருக்கும்.
சிம்ம ராசியில் மூன்று கிரக சேர்க்கை
அக்டோபர் 31ஆம் தேதி குரு சிம்ம ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.
நவம்பர் 12ஆம் தேதி செவ்வாய் கிரகமும் கடகத்தில் இருந்து சிம்ம ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.
மேலும் அங்கு ஏற்கனவே சஞ்சாரம் செய்து வரக்கூடிய கேது உடன் சேர்ந்து குரு + செவ்வாய்+ கேது ஆகிய கிரகங்களின் கூட்டணி ஏற்படுகிறது. இதன் காரணமாக குரு மங்கல யோகம் ஏற்படுவதோடு, குருவின் பார்வையால் மற்றும் 3 கிரக சேர்க்கையால் ஏற்படக்கூடிய நன்மைகள் எந்தெந்த ராசிகளுக்கு நன்மை கிடைக்கும். அவர்களுடைய வாழ்க்கையில் நிதி ஆதாயம், தொழில் வளர்ச்சி மற்றும் வேலை தொடர்பான வெற்றியை உள்ளிட்ட நன்மைகளை பெற உள்ளனர். மூன்று கிரக சேர்க்கை தரக்கூடிய நன்மை பெற உள்ள ராசிகளை தெரிந்து கொள்வோம்.
மேஷ ராசி
மேஷ ராசி அன்பர்களுக்கு, உங்கள் ராசிக்கு போர்வை புண்ணிய ஸ்தானமான 5ம் வீட்டில் ஏற்படக்கூடிய மூன்று அங்கிரக சேர்க்கை காரணமாக உங்களுக்கு அற்புதமான காலமாக அமைப்பு போகிறது. நீங்கள் எந்த வேலை செய்தாலும் உங்களுடைய திட்டமிட்ட செயலுக்கான வெற்றி முழுமையாக கிடைக்கும். நீண்ட காலமாக தொந்தரவு தந்து வந்து சில சிக்கல்கள், சிரமங்கள் தீரும்.
எதிர்பாராத நிதி நன்மை கிடைக்கும் வாய்ப்புள்ளதால் உங்களுடைய லாபம் முன்னேறுவதோடு, குடும்பத்தின் பொருளாதார நிலையையும் நேற்றும் அடையும். பொருள் வளம் சேரக்கூடிய காலம். நீங்கள் மேற்கொள்ளக்கூடிய பயணங்கள் சாதகமான பலனைத் தரும். மேலும் நீங்கள் முக்கிய முடிவுகளை நிதானமான மனநிலையுடன் எடுப்பதால் அற்புத பலனை பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.
கடக ராசி
கடக ராசி நண்பர்களுக்கு இந்த மூன்று கிரகங்களின் சேர்க்கை காரணமாக நவம்பர் மாதத்தில் மிகவும் சாதகமான சூழ்நிலை உங்களுக்கு ஏற்படும். பண ஆதாயம் பெறவும், புதிய வழிகளில் வருமானம் பெறவும் வாய்ப்புகள் உண்டு. வேலை தொடர்பான உங்கள் சூழ்நிலை மேம்படும். புதிய வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. கல்வித்துறையில் பணியாற்ற கூடியவர்களுக்கும், மாணவர்களுக்கும் உகந்த காலமாக அமையும். தொழில் செய்யக்கூடியவர்கள் புதிய ஒப்பந்தங்கள் பெற வாய்ப்புகள் உண்டு. சிந்தனை மிக்க செயல்கள் பெரிய வெற்றியை தரும்.
துலாம் ராசி
துலாம் ராசி அன்பர்களுக்கு பலவிதத்தில் சாதகமான பலன் கிடைக்க கூடிய காலம். வருமானத்திற்கான புதிய வழிகளை கண்டுபிடிப்பீர்கள். பழைய முதலீடுகளில் இருந்தும் நீங்கள் லாபம் அடைய முடியும். நீண்ட காலம் ஆக வேலை தேடக்கூடிய நண்பர்களுக்கு, அவர்கள் எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்கும். வேலையில் இருந்த தடைகளும், வேலை பளுவும் குறையும். தொழில் செய்யக் கூடியவர்களுக்கு வலுவான சூழ்நிலை ஏற்படும். அதிர்ஷ்டம் தேடி வரக்கூடிய காலமாக இருக்கும். மேலும் உங்களுடைய காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
உங்கள் ராசியிலும், லாப ஸ்தானத்திலும் மூன்று கிரகங்களின் சேர்க்கைகள் நடக்க உள்ளதால் அதிக யோக பலன் கிடைக்கக்கூடிய இந்த மாதத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ளவும்.
தனுசு ராசி
தனுசு ராசி அன்பர்களுக்கு யோகமான காலமாக இன்று நவம்பர் மாதம் அமையப் போகிறது. ஏனெனில் உங்கள் ராசிக்கு அற்புத பலனை தரக்கூடிய 9ம் ஸ்தானத்தில் மூன்று கிரகங்களின் சேர்க்கை நடப்பதோடு, குருவின் பார்வையில் பலனும் கிடைக்கிறது.
இதன் காரணமாக உங்களுடைய வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். வேலை, தொழில் திட்டங்கள் வெற்றியடையும். வியாபாரத்தை மேம்படுத்த, தொழிலை விரிவுபடுத்த எடுக்கும் முயற்சிகள் நல்ல பலனைத் தரும். முன்னர் நீங்கள் செய்த முதலீடுகள், கடின உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும். இந்த இடத்தில் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை இருக்கும் என்பதால் அவற்றை சரியாக பயன்படுத்திக் கொள்ளவும்.
கும்ப ராசி
கும்ப ராசி அன்பர்களுக்கு சம சப்தமஸ்தானமான 7ம் இடத்தில் குருவின் நகர்வு மற்றும் 3 கிரகங்களின் சேர்க்கை உங்களுக்கு சாதகமான பலனை தரும். குறிப்பாக நீண்ட காலமாக நீங்கள் சந்தித்து வரக்கூடிய சிக்கல்கள், துன்பங்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.
வேலை பளு, தொழிலில் உள்ள பிரச்சனைகளும், நஷ்டங்களும் தீரும். குருவின் அருளாலும், 3 கிரகங்களின் சாஞ்சாரம் உங்களுக்கு நன்மைகளை தரும்.புதிதாக வீடு, மனை, வாகனம் போன்ற சொத்துக்கள் வாங்குவதற்கான முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். உங்களுக்கு சுகபோக வாழ்க்கை கிடைக்காத வாய்ப்பு உண்டு. குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரம் செலவிடவதற்காக வாய்ப்பு கிடைக்கும்.
பொறுப்புத்துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் முற்றிலும் உண்மையானவை அல்லது துல்லியமானவை என்று நாங்கள் உறுதியளிக்கவில்லை. கூடுதல் விவரங்களுக்கு, அந்தந்தத் துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களை அணுகவும்.
