மணலை​யும், ஒரு சிறிய குச்​சி​யையும் மட்டுமே பயன்​படுத்தி மூதாட்டி ஒருவர் குழந்​தைகளுக்​குப் பாடம் கற்​பித்து வரும் சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்தவர் இந்திரா அம்மா. 85 வயதான இவர் நோட்டுப் புத்தகம், பேனா போன்ற எந்த பொருட்களும் இல்லாமல், மணலையும் சிறிய குச்சியையும் பயன்படுத்தி குழந்தைகளுக்குப் பாடம் கற்பித்து வருகிறார்.
‘அஷான் களரி’ எனப்படும் இந்த பாரம்பரியமான கல்வி முறை மிகவும் பிரபலமானதாகும். இதன்படி, ஒரு பாத்திரத்தில் மணலைக் கொண்டு வந்து வகுப்பறையில் பரப்பி, ஒரு குச்சியைக் கொண்டு அதில் அவர் எழுத்துகளை எழுதுகிறார். அந்த எழுத்துக்களைக் குழந்தைகள் தங்கள் விரல்களால் அதே மணல் பரப்பில் எழுதிப் பயிற்சி செய்கின்றனர்.
இந்த முறையில், மலையாளம், ஆங்கிலம், இந்தி மற்றும் கணிதம் உள்ளிட்ட அடிப்படை எழுத்துகள், எண்கள் மற்றும் வடிவங்களை மணலில் எழுதிக் கற்றுத் தருகிறார். எந்தவித பேனா, பேப்பர் போன்ற பொருட்கள் இல்லாமல் மணலில் குழந்தைகள் எழுதுவதால், அது அவர்களுக்கு உற்சாகமாகவும், ஆர்வமூட்டுவதாகவும் அமைகிறது. அதே நேரத்தில் தவறுகள் நேர்ந்தால் அதை எளிதில் அழித்து விட்டு எழுதலாம். அதனால், பேப்பர் வீணாகும் என்ற கவலையில்லை.
இது சம்பந்தமான வீடியோ ‘@mom_of_safaachiiii’ என்ற இன்ஸ்டா பக்கத்தில் பகிரப்​பட்​டுள்​ளது. இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து இணைய வாசிகள் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், ஒருவர் இந்த இடத்தை “உல​கின் மிக அழகான வகுப்​பறை” என்று வர்​ணித்​துள்​ளார்.
