செர்பியா பார்லிமென்ட் தேர்தலில் வரலாறு படைத்த மாணவர்கள்

பெல்கிரேட்: செர்பியா பார்லிமென்ட்டுக்கு நடந்த தேர்தலில் மாணவர் அமைப்பினர் அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தனர்.

அந்நாட்டில் அதிபர் அலெக்சாண்டர் வூசிக் தலைமையில் ஆட்சி நடந்தது

2024 நவம்பர் 1ம் தேதி நோவி சேட் என்ற இடத்தில் ரயில் நிலையத்தின் மேற்கூரை இடிந்து 16 பேர் உயிரிழந்தனர். இதன் பிறகு மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இந்த அமைப்பு அரசியல் இயக்கமாக மாறியது. ஊழலை ஒழிப்பு, பொதுஅமைப்புகளை அரசியல் பிடியில் இருந்து விடுவித்தல், மக்களின் உரிமைகள் நிலைநாட்டப்படும் என உறுதி அளித்தனர். இதனால், மக்கள் மத்தியில் அவர்களுக்கு செல்வாக்கு அதிகரித்தது.

250 இடங்களுக்கு நடந்த தேர்தலில், மாணவர் அமைப்பு 135 முதல் 140 இடங்களில் வெற்று பெறும் என தெரியவந்தது.

அதிபர் அலெக்ஸாண்டர் வூசிக்கின் கட்சி 105 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. தோல்வியை அலெக்ஸாண்டர் வூசிக்கும் ஒப்புக் கொண்டார். வெற்றியை தொடர்ந்து நாடு முழுதும் மாணவர்கள், மற்றும் பொது மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

Source link