படத்துல ஃபேமிலி கேர்ள்… துபாய் விழாவில் இப்படியா? நஸ்ரியா வீடியோவால் பொறி பறக்கும் இணையம்

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் அவரது 47-வது படமான சீன் படத்தை பிரபல மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கி வருகிறார். இப்படத்தில் மலையாள நடிகர்கள் நஸ்லேன், நஸ்ரியா நசீம், லால், ஆனந்தராஜ், ராஜ்பிரியன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

போலீசாக சூர்யா

‘ஆவேஷம்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ஜித்து மாதவன் இயக்கும் இப்படத்தில் சூர்யா போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட், ழகரம் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசை அமைக்கிறார். வினீத் அகஸ்டியன் ஒளிப்பதிவு செய்கிறார். சுமார் ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படம், நடிகர் சூர்யாவின் இரண்டாவது தயாரிப்பு நிறுவனமான ழகரம் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கப்படுகிறது. படம் நவம்பர் 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

12 ஆண்டுக்குப் பின் தமிழ் படம் 

இந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சி, துபாயில் உள்ள சிலிகான் சென்ட்ரல் மாலில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் நஸ்ரியா பேசுகையில், “12 ஆண்டுகளுக்கு பிறகு நான் ஒரு தமிழ்ப் படத்தில் நடிக்கிறேன். இந்த வாய்ப்பை ஜித்து மாதவனின் படத்தில் பெற்றது எனக்கு பெருமகிழ்ச்சி அளிக்கிறது. என்னுடைய சினிமா பயணத்தில் நான் கடந்து வந்த மிகவும் அற்புதமான அனுபவங்களில் ஒன்றாக இந்தப் படத்தின் படப்பிடிப்பு இருந்தது. சூர்யா சார், நஸ்லென் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றிகள். அனைவரும்
திரையரங்குகளுக்குச் சென்று ‘சீன்’ திரைப்படத்தைப் பாருங்கள். படம் அடிப்பொலியாக வந்திருக்கிறது.

நாங்கள் சினிமாக்களை தீவிரமாகப் பார்க்கத் தொடங்கிய காலத்தில் இருந்தே சூர்யா சாரை பார்த்து வளர்ந்திருக்கிறோம். நாங்களும் இதுபோன்று தீவிரமாக சினிமாக்களைத் தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்பதற்கு சூர்யா சாரும் ஒரு முக்கியக் காரணம். அவருடன் இணைந்து நடித்தது மிகவும் ஜாலியாக இருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக அவர் ஒரு மிகச்சிறந்த மனிதர். அவருடன் நேரத்தைச் செலவழித்து இந்தப் படத்தில் பணியாற்றியதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி” என்று தெரிவித்தார். 

நஸ்ரியா வீடியோவால் பொறி பறக்கும் இணையம்

இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் நடிகை நஸ்ரியா அணிந்து வந்த ஆடை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகியும் வருகிறது. 

நடிகை நஸ்ரியா சற்று கிளாமராக உடை அணிந்து வந்தது இணையவாசிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. சிலர் எதிர்ப்பு தெரிவித்தாலும், சிலர் ‘ஆடையில் என்ன தவறு இருக்கிறது; தவறு உங்கள் பார்வையில் தான் இருக்கிறது’ என்பது கூறி வருகிறார்கள். இதனால், இணையத்தில் ஆடை பற்றிய வாதம் அனல் பறந்து வருகிறது.  

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ரசிகர் தனது சமூக வலைதள பக்கத்தில், “நேத்து துபாய்ல நடந்த சீன் பட ப்ரமோஷன்ஸ்க்கு நடிகை நஸ்ரியாவும் வந்து இருந்தாங்க – அதுல அவங்க அணிந்திருந்த ஆடையை பெரிய பிரச்சனையாக பேசிட்டு இருக்காங்க. இதுக்கான காரணம் – நஸ்ரியாவும் இல்ல… விமர்சனம் வைக்கிற ரசிகர்களும் இல்ல காலம் தான் காரணம்! ஏன்னா,நஸ்ரியாவை நாம பட விழாக்களில்,படங்களில்   பார்த்து ரொம்ப காலங்கள் ஆகிவிட்டது! அவங்களோட பேஷன் போக்கு, உடை அணியும் பாணி, நவீனத்தன்மை (Fashion Trend, Dressing sense,Modernity) மாறியிருக்கும்.. இதுவே வேறு நடிகை யாராவது அதே உடையை அணிந்து வந்திருந்தால் பேசு பொருள் ஆகியிருக்கமா என்பதே சந்தேகம் தான்.ஆடை என்பது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட விருப்பம்! அதனால் மீண்டும் பிற்போக்குத்தனமாக யோசிக்காமல் வாழ்க்கையில் முன்னேற ஏதாவது முயற்சி செய்யுங்கள்.” என்று கூறியுள்ளார். 

Source link