அன்பில் கைதுக்கு பின்னணியில் ஆதவ் – சூர்யா வெற்றிக்கொண்டான் – aadhav behind anbil’s arrest says suriya vetrikondan

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைதுக்கு பின்னணியில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் செயல் திட்டம் இருப்பதாக வழக்கறிஞரும், திமுக பேச்சாளருமான சூர்யா வெற்றிக்கொண்டான் சமயம் தமிழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தவெக அரசு பொறுப்பேற்றவுடன் முறைகேடு வழக்கில் கைதாகும் முதல் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவார். சென்னையில் கைது செய்யப்பட்ட அவரிடம் காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தப்படுகிறது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வரும் திமுக தொண்டர்கள் தங்களது ஆதங்கத்தை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

திமுகவில் இருந்து ஆதவ் வெளியேற காரணமான அன்பில் ?

முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கைதுக்கு பின்னணியில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இருப்பதாக திமுக பேச்சாளர் சூர்யா வெற்றிக்கொண்டான் குற்றம்சாட்டியுள்ளார். ஆதவ் அர்ஜுனா திமுகவில் இருந்து வெளியேற அன்பில் மகேஸ் காரணமாக இருந்ததாகவும் இதனால் ஆட்சி அதிகாரம் கையில் வந்தவுடன் பழிவாங்கும் படலமாக அன்பில் மகேஸ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சமயம் தமிழுக்கு அளித்த பேட்டியில் சூர்யா வெற்றிக்கொண்டான் தெரிவித்துள்ளார்.

திருச்சி கிழக்கு இடைத்தேர்தலுக்காக கைதா ?

அதே சமயம் திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்ய உயர்நீதிமன்ற தனி நீதிபதி அமர்வு அனுமதி அளித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள திமுகவினர், இதையெல்லாம் பார்க்கும் போது இடைத் தேர்தல் ஒரு பக்கம் இருந்தாலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் நெருக்கம் காட்டுபவர்கள் குடும்பத்தோடு இணைந்து இருப்பவர்களை சுற்றி வளைக்கிறதா தவெக அரசு என்று எண்ணத் தோன்றுவதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

தேசியக் கல்விக் கொள்கையை எதிர்த்ததே கைதுக்கு காரணமா ?

புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாட்டில் நுழையவிடக் கூடாது என்று விடாப்பிடியாக இருந்த திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் தற்போது கார்னர் செய்யப்படுவதாவும் திமுக தொண்டர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். ஆர்எஸ்எஸ் கொள்கைக்கு ஏற்பத தவெக அரசு நடந்துக்கொள்வதாகவும் குற்றஞ்சாட்டியுள்ள திமுகவினர், தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி அளித்தன் மூலமே ஆர்எஸ்எஸ்-ன் கள்ளக் குழந்தை தவெக என்பதை மீண்டும் நிரூபித்து உள்ளதாகவும் திமுகவினர் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

எந்த வழக்கையும் எந்த கைதுக்கும் திமுகவினர் அஞ்சி நடுங்கி ஓடி ஒளிந்து விட மாட்டோம் என்றும், மாறாக எங்களை மிரட்டி பார்க்க வேண்டும் என பொய் வழக்கு புனையப்பட்டால் அதற்கான சன்மானம் மக்கள் மன்றத்தால் வழங்கப்படும் என்றும் சூர்யா வெற்றிக்கொண்டான் சமயம் தமிழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Source link