சென்னை: மீனவர் சங்கங்கள் இணைந்து உருவாக்கிய, நெய்தல் மக்கள் கட்சி, தே.ஜ., கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள, 50க்கும் அதிகமான மீனவ சங்கங்கள் ஒன்றிணைந்து, நெய்தல் மக்கள் கட்சி உருவாக்கப்பட்டது. இதற்கு தலைவராக சென்னையைச் சேர்ந்த கு.பாரதி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் செல்வாக்கு பெற்றுள்ள, நெய்தல் மக்கள் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. இதில், சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., தலைமையிலான, தே.ஜ., கூட்டணியை ஏகமனதாக ஆதரிப்பது என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில், மீனவ மக்களுக்கான பிரதிநிதித்துவம் மற்றும் பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரத்தை, மேம்படுத்தும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதேசமயம், கடந்த தி.மு.க., ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட, மீனவர் விரோத திட்டங்களை கைவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
