போர்ச்சுக்கல் அதிபர் தேர்தலில்
ஜோஸ் செகுரோ வெற்றி
போர்ச்சுக்கல் நாட்டின் அதிபர் தேர்தலில் சோசலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அன்டோனியோ ஜோஸ் செகுரோ மிகப்பெரிய வெற்றியை பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.: தென்மேற்கு ஐரோப்பிய நாடான போர்ச்சுகலில், கடந்த மாதம் 18ம் தேதி அதிபர் பதவிக்கான தேர்தல் நடந்தது.
இத்தேர்தலில் போட்டியிட்ட வலதுசாரி வேட்பாளரான ஆண்ட்ரே வென்ச்சுரா மற்றும் சோசலிஸ்ட் கட்சியின் அன்டோனியோ ஜோஸ் செகுரோ இருவருக்கும் பெரும்பான்மைக்கு தேவையான 50 சதவீதத்துக்கு அதிகமான ஓட்டுகள் கிடைக்கவில்லை.
இதைத் தொடர்ந்து, அதிபர் தேர்தலுக்கான இரண்டாம் சுற்று நேற்று முன்தினம் நடந்தது. இதில், 66 சதவீத வாக்குகளை பெற்று செகுரோ வென்றார். செகுரோ அடுத்த மாதம் அதிபராக பதவியேற்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
