தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், கனமழை காரணமாக அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தி.மு.க பிரமுகரை படுகொலை செய்த கும்பல்; தீவிர விசாரணையில் போலீசார்
இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியில் முதலமைச்சர் விஜய் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டார். செம்பரம்பாக்கம் ஏரி நீர் நிலவரம் குறித்து நீர்வளத் துறை அதிகாரிகளிடம் முதலமைச்சர் விஜய் கேட்டறிந்தார். ஏரியின் நீர் இருப்பு, கொள்ளளவு, மழை வந்தால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். மேலும் ஏரியின் 5 கண், 19 கண் மதகுகள் பகுதியிலும் ஆய்வு செய்தார்.
ஏரியின் தற்போதைய நீர்வரத்து 150 கனஅடியாக உள்ள நிலையில் 208 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. ஏரியின் மொத்த உயரம் 24 அடி என்ற நிலையில் தற்போது நீர் இருப்பு 14.88 அடியாக உள்ளது. முன்னதாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு முதலமைச்சர் விஜய் வருவதற்கு முன்பு அமைச்சர் தென்னரசு ஆய்விற்கான ஏற்பாடுகளை கவனித்தார். தொடர்ந்து செம்பரம்பாக்கம் செல்லும் வழியில் குன்றத்தூர் பகுதியில் முதலமைச்சர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தூரத்தில் கான்வாய் வாகனங்களை பார்த்ததுமே மக்கள் கூட்டம் ஆர்ப்பரிக்க தொடங்கினர். அதுமட்டுமல்லாமல், முதலமைச்சர் விஜயை வீடியோ எடுப்பதற்காக தொண்டர்கள் தங்கள் செல்போன்களை தயார் நிலையில் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
