கொல்கட்டா: ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டியில் சென்னை அணி 0–1 என, மோகன் பகான் அணியிடம் தோல்வியடைந்தது.
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து 13வது சீசன் நடக்கிறது. மொத்தம் 13 அணிகள் பங்கேற்கின்றன. கொல்கட்டாவில் நடந்த லீக் போட்டியில் மோகன் பகான், சென்னை அணிகள் மோதின. முதல் பாதி கோல் எதுவுமின்றி சமநிலையில் இருந்தது. இரண்டாவது பாதியின் 85வது நிமிடத்தில் லிஸ்டன் ‘அசிஸ்ட்’ செய்த பந்தில் மோகன் பகான் அணியின் மன்விர் சிங் ஒரு கோல் அடித்தார். இதற்கு சென்னை அணியினரால் பதிலடி கொடுக்க முடியவில்லை.
ஆட்டநேர முடிவில் சென்னை அணி 0–1 என தோல்வியடைந்தது. சென்னை அணி இதுவரை விளையாடிய 3 போட்டியில், 2 தோல்வி, ஒரு ‘டிரா’ என ஒரு புள்ளியுடன் 11வது இடத்தில் உள்ளது. தொடர்ச்சியாக 2வது வெற்றியை பதிவு செய்த மோகன் பகான் அணி (6 புள்ளி) 5வது இடத்துக்கு முன்னேறியது.
