மேற்கு குஷ்டியா மற்றும் வடமேற்கு ரங்பூர் ஆகிய பகுதிகளில் இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன.
வங்கதேசத்தில் முஸ்லீம் இளைஞர் கொல்லப்பட்ட சம்பவத்தில் இந்துக்களின் வீடுகள் மற்றும் கடைகள் மீது கும்பல் தாக்குதல் நடந்துள்ளது.
டாக்காவிலிருந்து 300 கி.மீ தொலைவில் உள்ள ரங்பூரில் தச்பாரா சந்தைப் பகுதியில் அதிகாலை வேளையில் இந்துக்களின் வீடுகள் மற்றும் கடைகள் மீது கும்பல் தாக்குதல் நடத்தியது.
தச்பாரா சந்தைப் பகுதியில் வசிக்கும் 100க்கும் மேற்பட்ட இந்து குடும்பங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ராகிப் ஹசன் என்ற முஸ்லிம் இளைஞர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல் நடந்தது.
கொல்லப்பட்ட இளைஞரின் தாயாரே, “இந்துக்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை” என்று கூறியும் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
ராகிப் ஹசன் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான முன்விரோதத்தில் முகமது மோமின் என்பவரால் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கொலையாளிகள் மீதான கவனத்தைத் திசைதிருப்ப திட்டமிட்டு இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தியதாகப் போலீசார் தெரிவித்தனர்.
