கிரானைட் வீரமணி வழக்கு: லஞ்ச பணத்தில் ரூ.24 கோடிக்கு தங்கம் வாங்கிய அருண் ஐ.பி.எஸ்.,?

– நமது நிருபர் –

வீரமணி மீதான வழக்கு விசாரணையை, சி.பி.ஐ.,க்கு மாற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில், தாம்பரம் பகுதி வாராகி என்பவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி வி.லட்சுமி நாராயண் முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் வாராகி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் மனு: வீரமணி வழக்கை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய, அவரது நிறுவனத்துக்கு சொந்தமான 147.87 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் கைமாறி உள்ளன.

வழக்கை முடிக்க வாங்கிய லஞ்ச பணத்தில், சென்னை பிரபல நகைக்கடையில் இருந்து, 24 கோடி ரூபாய்க்கு, ஐ.பி.எஸ்., அதிகாரி அருண் தங்கம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த பணம், பிரகாஷ் கண்ணையா வழியாக கைமாறி உள்ளது. விசாரணை தொடங்கியதும், அவர் வெளிநாட்டுக்கு ஓடி தலைமறைவாகி விட்டார்.

லஞ்ச பணத்தை மறைக்கவே, இந்த தங்கம் வாங்கப்பட்டு உள்ளதா என அறிய, நகைக்கடை ரசீதுகள், வங்கி பரிவர்த்தனைகள் குறித்து விசாரிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link