வெறும் 10 ரூபாயில் தங்கம், வெள்ளி வாங்கலாமா? ஜியோவின் அசத்தல் திட்டம்..!

டிஜிட்டல் தங்கம் – ஜியோ ஃபைனான்ஸ் நிறுவனத்தின் இந்த முதலீட்டுத் திட்டங்களின் முக்கிய விவரங்கள்:

ஜியோ தங்கம் (SmartGold / JioGold) :

வெறும் ரூ.10-ல் இருந்து தொடங்கலாம்.

24 காரட் (99.99% தூய்மையான) தங்கத்தை வாங்கலாம்.

நீங்கள் வாங்கும் தங்கத்திற்கு இணையான தங்கம் காப்பீடு செய்யப்பட்ட பெட்டகங்களில் (Insured Vaults) பாதுகாப்பாக வைக்கப்படுகிறது.

உங்கள் டிஜிட்டல் தங்கத்தை எப்போது வேண்டுமானாலும் பணமாக மாற்றிக் கொள்ளலாம் அல்லது சான்றளிக்கப்பட்ட தங்க நாணயங்களாக, நகைகளாக உங்கள் வீட்டிற்கே டெலிவரி பெறலாம்.

ஜியோ வெள்ளி (JioSilver) :

ஜியோ ஃபைனான்ஸ் நிறுவனம் புதிதாக ‘ஜியோசில்வர்’ (JioSilver) என்ற டிஜிட்டல் வெள்ளி முதலீட்டு சேவையையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தச் சேவையின் கீழ், பயனர்கள் ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.10 முதல் ரூ.1 லட்சம் வரையிலான தொகையில், நேரடிச் சந்தை விலையில் டிஜிட்டல் வெள்ளியை வாங்கலாம்.

பயனர்கள் தங்கள் வசம் உள்ள வெள்ளியை விற்கும்போது, ​​அதற்கான தொகை நேரடியாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

Source link