விவசாயிகளுக்கான ஊக்கத்தொகையை நிறுத்தச் சொல்லும் மத்திய நிதியமைச்சரின் போக்கை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் கோடிக்கணக்கில் வரிச்சலுகையும், கடன் ரத்துகளும் செய்யும் மத்திய அரசு, விவசாயிகளின் ஊக்கத்தொகையை மட்டும் நிறுத்தச் சொல்வது ஏன்?
நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முக்கியமான தேர்தல் நேரத்தில், தேவையில்லாத திரைப்படப் பிரச்சினைகளைக் கிளப்பி மக்களின் கவனத்தைச் திசை திருப்ப வேண்டாம். எத்தகைய நிகழ்வும் சட்டத்துக்கு உட்பட்டே நடக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
