பந்தலுார்.: கேரள மாநிலம், வயநாடு பகுதியில், எம்.டி.எம்., எனப்படும் போதைப்பொருள் கடத்தல் வழக்கில், த.வெ.க., நீலகிரி மேற்கு மாவட்ட இணை செயலர் முகமதுநசீப், அக்., 23ம் தேதி, கேரள மாநில மதுவிலக்கு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து, மாவட்ட செயலர் சரவணன், அவரை கட்சி பொறுப்பு மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்தார். இந்நிலையில், போதை பொருள் கடத்தல் சம்பவத்திற்கு, அவருக்கு உதவியாக இருந்ததாக கூறி, மாவட்ட துணை செயலர் ஸ்ரீஜித், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அமீர் அப்பாஸ் ஆகியோரையும் கட்சி பொறுப்பு, அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து மாவட்ட செயலர் நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
ஆளும் கட்சியில் போதை பொருள் கடத்தலில் தொடர்புடைய கட்சி நிர்வாகிகள் நீக்கம் செய்யப்பட்ட சம்பவம், நீலகிரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
