நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி: இந்திய ‘ஏ’ அணி 488 ரன் குவிப்பு

லின்கான்,

இந்தியா ‘ஏ’-நியூசிலாந்து ‘ஏ’ அணிகள் இடையிலான அதிகாரபூர்வமற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி (4 நாள் ஆட்டம்) நியூசிலாந்தின் லின்கானில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இந்தியா 113 ரன்னும், நியூசிலாந்து 317 ரன்னும் எடுத்தன.

204 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 2-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 106 ரன்கள் எடுத்திருந்தது. தேவ்தத் படிக்கல் 56 ரன்னுடனும், தமிழகத்தின் சாய் சுதர்சன் 39 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். 3-வது நாளான நேற்று அவர்கள் தொடர்ந்து பேட் செய்து அணியை சரிவில் இருந்து மீட்டு முன்னிலை பெற வைத்தனர். ஸ்கோர் 225 ரன்னை எட்டிய போது சாய் சுதர்சன் 91 ரன்னில் (184 பந்து, 12 பவுண்டரி) கேட்ச் ஆனார். மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய தேவ்தத் படிக்கல் ஒரு ரன்னில் இரட்டை சதத்தை தவறவிட்டார். அவர் 199 ரன்னில் (248 பந்து, 24 பவுண்டரி, 3 சிக்சர்) ஜாக் கிப்சன் லெக்சைடு வாக்கில் வீசிய பந்தில் விக்கெட் கீப்பர் ஹாயிடம் சிக்கி சர்ச்சைக்குரிய முறையில் ஆட்டமிழந்தார். தேவ்தத் படிக்கல், ‘பந்து பேட்டில் படவில்லை, தவறான தீர்ப்பு அளித்து விட்டீர்கள்’ என்று நடுவரை நோக்கி சைகை காட்டியபடி அதிருப்தியுடன் நடையை கட்டினார். அடுத்து வந்த யாஷ் ரத்தோட் தன் பங்குக்கு 66 ரன்கள் திரட்டினார்.

ஆட்ட நேரம் முடிவில் இந்திய ‘ஏ’ அணி 2-வது இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 488 ரன்கள் குவித்து 284 ரன்கள் முன் னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. வாஷிங்டன் சுந்தர் 51 ரன்னுடனும், ஆகாஷ் தீப் ரன் எதுவும் எடுக்காம லும் உள்ளனர். இன்று கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.

Source link