அன்பில் மகேஷை சொல்லி வச்சி தூக்கிய தவெக அரசு: இனி வரும் காலம் திமுகவிற்கு திக் திக் நிமிடங்கள் என பதிவின் பின்னணி என்ன? – tvk govt arrest of former dmk minister anbil mahesh context behind the tvk it wing post saying

திமுக ஆட்சிக் காலத்தில், தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குதல், பள்ளிகளின் தரத்தை உயர்த்துதல் போன்ற அரசின் பல்வேறு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்யப்பட்டதில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் தொடர்புள்ளதாகக் கூறி நேற்று கைது செய்யப்பட்டார். இந்தக் கைது விவகாரத்தில் தவெக ஐடி விங் பதிவு தற்போது வைரலாகி பேசுபொருளாகியுள்ளது.

தமிழகத்தில் கடந்த 2021-2026 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில், தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குதல், பள்ளிகளின் தரத்தை உயர்த்துதல் மற்றும் டிடிசிபி (DTCP) போன்ற அரசின் பல்வேறு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்யப்பட்டதில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் தொடர்புள்ளதாகக் கூறி நேற்று கைது செய்யப்பட்டார். இந்தக் கைது விவகாரத்தில் தவெக ஐடி விங் பதிவு தற்போது வைரலாகி பேசுபொருளாகியுள்ளது.

அன்பில் மகேஷ் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

இதுகுறித்து வழக்கு விசாரணையில் அன்பில் மகேஷ் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்த நிலையில், நேற்று அவரது முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனால் 100 கோடி லஞ்சப் புகார் வழக்கில் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்படலாம் எனக் கூறப்பட்ட நிலையில், நேற்று அவர் கைது செய்யப்பட்டார்.

தவெக அரசின் முதல் கைது நடவடிக்கை

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்றவுடன் முறைகேடு வழக்கில் கைதாகும் முதல் திமுகவின் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆவார். சென்னையில் கைது செய்யப்பட்ட அவரிடம் காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு, அதனைத் தொடர்ந்து புழல் சிறையில் அன்பில் மகேஷ் அடைக்கப்பட்டார்.

கைது செய்யத் தயாரானதா தவெக அரசு?

நேற்று காலை சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து அவரது மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டார்.ஆனால் நீதிமன்ற உத்தரவுக்கு முன்னரே தமிழக வெற்றிக் கழகத்தின் ஐடி விங் சமூக வலைதளப் பக்கத்தில் “இனி வரும் காலம்.. திமுகவிற்கு திக் திக் நிமிடங்கள்!” எனக் குறிப்பிட்டு பதிவிடப்பட்டது. மேலும் முன்னாள் அமைச்சரும் தற்போதைய திருச்சி மேற்கு எம்.எல்.ஏ-வுமான கே. என். நேரு ஊழல் வழக்கு தொடர்பான மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்தச் சூழலில் தவெகவின் பதிவு அரசியல் வட்டாரத்தில் பல்வேறு சந்தேகக் கேள்விகளை எழுப்பியுள்ளது. அன்பில் மகேஷ் மீது கைது நடவடிக்கைக்கு தேவையான அனைத்தையும் தவெக அரசு முன்கூட்டியே தயார் செய்திருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றனர்.

3 ஃபைல்களில் ஒரு ஃபைல்தான் அன்பிலா?

முன்பு சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்ற போது தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் எதிர்க்கட்சியினரின் கேள்வி குறித்து பதில் அளித்தார். அப்போது பேசிய அவர், என் டேபிளில் மூன்று ஃபைல்கள் உள்ளன. அதனைத் திறக்க வைத்திட வேண்டாம் என எதிர்க்கட்சியினரை எச்சரிக்கும் வகையில் குறிப்பிட்டுப் பேசினார். தற்போது திமுகவின் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைதானதைத் தொடர்ந்து, முதல்வர் குறிப்பிட்ட 3 ஃபைல்களில் ஒன்று அன்பில் மகேஷ் ஊழல் வழக்கு என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றனர்.

கைது நடவடிக்கை தொடருமா

இனி வரும் காலங்களில் திமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம் எல் ஏக்கள் மீது ஊழல் மற்றும் குற்றச்சாட்டுகள் தொடர்பான கைது நடவடிக்கை தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. முதல் முறையாக முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்ட விவகாரம் திமுகவினரை கலக்கத்தில் ஆழ்த்துயுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றனர்.

Source link