கேரளாவில் சிறுவன் ஓட்டிய காரால் விபத்து: நீதிபதியான அப்பா மீது வழக்​கு ​ப​திவு

கொச்சி: கொச்சியில் மெர்​சிடிஸ் பென்ஸ் காரை ஓட்​டிச் சென்று விபத்தை ஏற்​படுத்​திய சிறு​வனின் மீதும் அவரது தந்தையான நீதிபதி​ மீதும் வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது.

கேரள மாநிலம், எர்​ணாகுளம் அருகே உள்ள சேரானல்​லூரில் நேற்​று​முன்​தினம் அதி​காலை ஸ்கூட்​டரில் சென்​றவர் மீது மெர்சிடிஸ் பென்ஸ் கார் மோதி​யது. இந்த விபத்​தில் ஸ்கூட்​டரில் சென்ற ஜெய​பால​கிருஷ்ணன் (55) என்​பவர் உயி​ரிழந்​தார். இந்தக் காரை ஓட்டி வந்தது ஒரு நீதிபதியின் 17 வயது மகன் என தெரியவந்தது. இதையடுத்து, இந்த விபத்து தொடர்​பாக, காரை ஓட்​டிய எர்​ணாகுளம் கூடு​தல் மாவட்ட அமர்வு, நீதிப​தி​யின் 17 வயது மகன் மீது வழக்​குப் பதிவு செய்தது. மேலும், விபத்தை ஏற்படுத்​திய சிறு​வனுக்கு எர்​ணாகுளம் சிறார் நீதிக் குழு​மம் நேற்று ஜாமீன் வழங்​கியது.

இதற்​கிடையே, உயி​ரிழந்​தவரின் குடும்​பத்​தினரின் போராட்​டம் மற்​றும் பொது​மக்​களின் எதிர்ப்பு அதி​கரித்​ததைத் தொடர்ந்து 17 வயது சிறு​வன் மீண்​டும் காவலில் எடுக்​கப்​பட்​டார். அத்​துடன், விபத்​தில் சிக்​கிய மெர்​சிடிஸ் பென்ஸ் கார் சிறுவனின் தந்தையான நீதிப​தி​யின் பெயரில் பதிவு செய்​யப்​பட்​டிருந்​த​தால் அவர் மீதும் வழக்​கு ப​திவு செய்​யப்​பட்​டுள்​ளது. மேலும், இந்த விபத்து குறித்து விசா​ரிக்க சிறப்​புப் புல​னாய்​வுக் குழு​வும் அமைக்கப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்​து, ஜெய​பால​கிருஷ்ணனின் உறவின​ரான ஜெயலட்​சுமி கூறும்போது, “நாங்​கள் காவல் நிலை​யத்​துக்​குச் சென்​ற​போது, உணர்ச்​சிவசப்பட வேண்​டாம் என்​று தெரிவித்தனர். சட்​டப்​படி, 17 வயது சிறு​வன் வாக​னம் ஓட்​டக் கூடாது என்​பது உங்​களுக்​குத் தெரி​யாதா என்று அவரது தந்​தை​யான நீதிப​தி​யிடம் கேட்​டேன். அதற்கு அவர், ‘என்​னைக் கேள்வி கேட்​க உங்​களுக்கு தகுதி இல்லை’ என்று ஆணவ​மாகப்​ பதிலளித்​தார்​” என்றார்.

Source link