டெஹ்ரான்: ஈரானில் அமைதிக்கான நோபல் பரிசு பெற் ற நர்கெஸ் முகமதிக்கு, அந்நாட்டு நீதிமன்றம் மேலும் ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
மேற் காசிய நாடான ஈரானில் மரண தண்டனை மற்றும் பெண்களுக்கு கட்டாய ஆடைக் கட்டுப்பாடுக்கு எதிரா க, 25 ஆண்டு களுக்கும் மேலாக குரல் கொடுத்து வருபவர் நர்கெஸ் முகமதி, 53. பெண்களின் உரிமைகளுக்காகவும், மனித உரிமை மீறல்களுக்கு எதிராகவு ம் தொடர்ந்து போராடி வரும் முகமதிக்கு, 2023ல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது .
அரசுக்கு எதிரான போராட்டங்களுக்காக அவர் பலமுறை கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் பெரும்பாலும் சிறையிலேயே இருந்த அவருக்கு, மேலும் ஒரு வழக்கில் ஆறு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நாட்டை விட்டு வெளியேற இரண்டு ஆண்டு தடையும் விதிக்கப்பட்டுள்ளது. இதையும் சேர்த்து அவரது மொத்த சிறை தண்டனை காலம் 44 ஆண்டுகளை தாண்டியுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
