கோயம்பேட்டில் ஆயுதபூஜை சிறப்பு சந்தையால் உருவான குப்பைகளை அகற்ற தீவிர நடவடிக்கை

சென்னை: கோயம்பேட்டில் ஆயுதபூஜை சிறப்பு சந்தையால் உருவான குப்பைகளை அகற்ற சந்தை நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறது.

கோயம்பேடு மொத்த விற் பனை சந்தை வளாகத்தில், நவராத்திரி, ஆயுதபூஜை பண்டிகைகளை முன்னிட்டு கடந்த அக்.14 முதல் 23-ம் தேதி வரை 10 நாட்களுக்கு அவல், பொரி, வாழைக்கன்று, பூசணிக் காய் உள்ளிட்ட பூஜை பொருட் கள், பூக்கள் மற்றும் பல்வேறு பழ வகைகள் விற்பனை செய் யும் வகையில் சிறப்பு சந்தை நடைபெற்று வந்தது.

பூஜை பொருட்கள் மொத்த விலையில், விலைக் குறைவாகவும், அனைத்து வகையான பொருட்களும் ஒரே இடத்தில் கிடைத்ததால், பொதுமக்கள், கார்கள், ஆட்டோக்கள், சரக்கு வாகனங்கள் வைத்திருப்போர் என பல்வேறு தரப்பினரும் சிறப்பு சந்தைக்கு வந்து பூஜை பொருட்களை வாங்கிச் சென்றனர்.

தற்போது சந்தை நிறைவடைந்த நிலையில் இப்பகுதியில் அதிக குப்பைகள் குவிந்துள்ளன. கோயம்பேடு சந்தை வளாகத்தில் அன்றாடம் உருவாகும் சுமார் 200 டன் அளவை விட இரு மடங்கு குப்பை உருவானது.

இதைத் தொடர்ந்து, கோயம்பேடு சந்தை நிர்வாக குழு சார்பில் திடக்கழிவு அகற்றும் ஒப்பந்ததாரருக்கு முழுவீச்சில் குப்பைகளை அகற்றவும் வளாகத்தை தூய்மையாக்கும் பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தல் கள் வழங்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து கூடுதல் இயந்திரம் மற்றும் கூடுதல் பணியாளர்களை பயன்படுத்தி தற்போது நா ளொன்றுக்கு 500 டன் அளவுக்கு குப்பைகள் கடந்த 3 தினங்களாக அகற்றப்படுகின்றன.

Source link