இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு பங்குனி-29 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : தசமி இரவு 10.28 மணி வரை பிறகு ஏகாதசி
நட்சத்திரம் : திருவோணம் நண்பகல் 12.33 மணி வரை பிறகு அவிட்டம்
யோகம் : அமிர்த/மரணயோகம்
ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை
ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி
சுபமுகூர்த்த தினம். ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி நான்கு கருட சேவை. திருவெள்ளறை ஸ்ரீ சுவேதாத்திரிநாதர், ஒழுகைமங்கலம் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் ரதோற்சவம். சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை. ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு.
வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக் குமார சுவாமிக்கும் அபிஷேகம், அலங்காரம் வழிபாடு. காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன், இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன், தஞ்சை புன்னை நல்லூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலை அபிஷேகம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு. தேவக்கோட்டை ஸ்ரீ சிலம்பணி விநாயகர், ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் தலங்களில் காலை அபிஷேகம். ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாத சுவாமி சிறப்பு அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-இன்பம்
ரிஷபம்-செலவு
மிதுனம்-தெளிவு
கடகம்-உதவி
சிம்மம்-ஆர்வம்
கன்னி-உண்மை
துலாம்- பரிவு
விருச்சிகம்-பாசம்
தனுசு- உறுதி
மகரம்-மேன்மை
கும்பம்-போட்டி
மீனம்-பரிவு
