தேர்தல் ஆணை​யருக்கு தடை கோரும் மனு ஏற்புடையதல்ல: உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில்

புதுடெல்லி: தேர்தல் ஆணை​யருக்கு தடை விதிக்​கக் கோரும் எந்த மனு​வும் விசா​ரணைக்கு ஏற்​புடையதல்ல என்று தேர்தல் ஆணையம் சார்​பில் உச்​சநீ​தி​மன்​றத்​தில் பதில் மனு தாக்​கல் செய்யப்​பட்​டுள்​ளது.

தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் அதிகாரத்தைத் தனிப்​பட்ட முறை​யில் பயன்​படுத்​து​வ​தாகக் கூறி ராகேஷ் குமார் சிங் தொடர்ந்த வழக்​கில் இந்த பதில் மனுவை தாக்​கல் செய்​துள்ள தேர்தல் ஆணையம், தன் மீதான குற்றச்சாட்டு​களை மறுத்துள்ளது.

தேர்​தல் ஆணை​யத்​தின் முடிவு​கள் மூன்று உறுப்​பினர்​களின் ஒருமித்த ஒப்​புதலுடன் எடுக்​கப்​பட்​ட​து. அவசர​மான விவகாரங்களில் தேர்​தல் ஆணை​யர்​கள் மின்​னணு முறை​யில் ஒப்புதல் அளிப்​ப​தாக​வும், பின்​னர் அந்த ஒப்​புதல் கோப்​பு​களில் பதிவு செய்​யப்​படு​வ​தாக​வும் தேர்​தல் ஆணை​யம் விளக்​கம் அளித்துள்​ளது.

மேலும், வாக்​காளர் பட்​டியலில் புதி​தாகப் பெயர் சேர்ப்​ப​தற்​கான படிவம் 6-ல் எந்​தத் திருத்​த​மும் செய்​ய​வில்லை என்​றும், சிறப்பு தீவிர வாக்​காளர் பட்​டியல் திருத்​தப் பணிக்​காகப் பயன்​படுத்​தப்​படும் கூடு​தல் உறு​தி​மொழிப் படிவம் தனி​யான ஆவணம் என்றும், இணை​யதளத்​தில் அது இடம்​பெற்​றுள்ள விதம் படிவத்தில் மாற்​றம் செய்​யப்​பட்​டதைப் போன்ற தோற்​றத்தை ஏற்படுத்​தி​யிருக்​கலாம்.

மேலும், 2025 ஜூன் 24, அக்​டோபர் 27, 2026 மே 14 ஆகிய தேதி​களில் வெளி​யிடப்​பட்ட எஸ்ஐஆர் தொடர்​பான மூன்று உத்​தர​வு​களும் தேர்​தல் ஆணை​யத்​தின் ஒரு​மித்த முடிவுகளின் அடிப்​படை​யிலேயே பிறப்​பிக்​கப்​பட்​டதாக தெரிவித்துள்ளது.

Source link