மேலும் உயர்ந்த தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன..?

சென்னை,

தங்கம் விலை கடந்த வாரத்தில் தொடர் சரிவைச் சந்தித்து வந்த நிலையில், வார இறுதியில் சற்று உயர்ந்தது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் தங்கம் விலை உயர்ந்தது. நேற்று சவரனுக்கு ரூ.120-ம், கிராமுக்கு ரூ.15-ம் உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,04,680-க்கும், ஒரு கிராம் ரூ.13,085-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று தங்கம் விலை மேலும் உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,05,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.50 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,135-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் 3-வது நாளாக இன்றும் மாற்றமில்லை. அதன்படி வெள்ளி ஒரு கிராம் ரூ.220-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Source link