அசின் மகள்: 15 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி படங்களில் நடித்து வந்த அசின் தொழில் அதிபர் ராகுல் சர்மாவை காதலித்து 2016ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டார். அந்த தம்பதிக்கு அரின் சர்மா என்கிற 9 வயது மகள் இருக்கிறார்.
அசினுக்கு தமிழ், மலையாளம், இந்தி, ஆங்கிலம் என மொத்தம் 7 மொழிகளில் பேசத் தெரியும். இந்நிலையில் அம்மாவை மிஞ்சிவிட்டார் அரின். இந்த வயதிலேயே அரினுக்கு 12 மொழிகள் தெரியும். இது குறித்து ராகுல் சர்மா அண்மையில் அளித்த பேட்டியில் கூறியதாவது,
ராகுல் சர்மா பாராட்டு: அரினுக்கு கொரியன், ஜப்பானிய மொழி, சீன மொழி என 12 மொழிகள் புரியும், அதில் பேசவும் செய்வார். ஆனால் நானும், மனைவியும் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் தான் பேசுவோம். எங்கள் வீட்டில் டிவி இல்லை. அரினுக்கு செல்போன் கொடுக்க மாட்டோம். எங்கள் வீட்டில் ஏகப்பட்ட புத்தகங்கள் உள்ளது. அரின் இரண்டாம் வகுப்பு தான் படிக்கிறார். ஆனாலும் 8ம் வகுப்பு, 9ம் வகுப்பு புத்தகங்கள் கூட வீட்டில் இருக்கிறது.
அரின் இப்படி வளர அசின் தான் காரணம். என் வாழ்க்கையின் பெரிய பலமாக இருக்கிறார் என் மனைவி. என்னை நன்கு புரிந்து வைத்திருக்கிறார். கடினமான நேரங்களில் என்னை ஊக்குவித்து தைரியம் கொடுக்கிறார் அசின் என்றார்.
குழந்தை வளர்ப்பு: ஒரு பிரபலமான நடிகையாக இருந்த அசின் தற்போது இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறார். புகைப்படக் கலைஞர்கள் கண்ணில் படாமல் வாழ்வது எப்படி என்று அசினிடம் இருந்து தான் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார்கள் ரசிகர்கள். இந்நிலையில் ராகுல் சர்மா சொன்னதை கேட்டு வியக்காமல் இருக்க முடியவில்லை.
பெரும் பணக்காரரான ராகுல் வீட்டில் ஒரு டிவி கூட இல்லாதது ஆச்சரியமான விஷயம். தற்போது குழந்தைகள் எல்லாம் செல்போன் பயன்படுத்துவது என்பது சாதாரண விஷயமாகிவிட்டது. அப்படி இருக்கும்போது அரினுக்கு செல்போன் பயன்படுத்தும் பழக்கமே இல்லை. மேலும் புத்தகங்கள் வாசிப்பதுடன் புதுப் புது மொழிகளை கற்று வருவது பாராட்டுக்குரியது.
அசின் இன்ஸ்டா: அசின் இன்ஸ்டாகிராமில் கணக்கு வைத்திருந்தாலும் ஆக்டிவாக இல்லை. அண்மையில் தான் ஓணம் பண்டிகை கொண்டாடியபோது தன் செல்ல மகள், கணவரை புகைப்படம் எடுத்து இன்ஸ்டா ஸ்டோரியில் போட்டிருந்தார். அதை பார்த்துவிட்டு தான் அடேங்கப்பா, அசின் மகள் அரின் என்ன வேகமாக வளர்ந்துவிட்டார் என சினிமா ரசிகர்கள் வியந்ததுடன் அந்த குழந்தையை வாழ்த்தினார்கள்.
அரின் புகைப்படங்களை மட்டும் எப்பொழுதாவது இன்ஸ்டாகிராமில் வெளியிடுகிறார் அசின். சினிமா படங்களில் பார்த்த அசின் தற்போது எப்படி இருக்கிறார் என்பது யாருக்கும் தெரியாது. அவரை பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். உங்களின் புகைப்படங்களையும் வெளியிடலாமே அசின் என கேட்கிறார்கள்.
சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்
அசின் காதல் கதை: கோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்ற இடத்தில் அசினுக்கு நடிகர் அக்ஷய் குமாருடன் நட்பு ஏற்பட்டது. அவர் மூலமாக தான் ராகுல் சர்மா உடன் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறி இரு வீட்டார் ஆசியுடன் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு கணவருடன் டெல்லியில் வசித்து வருகிறார் அசின். ரசிகர்கள் நினைப்பது போன்று மும்பையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Source link
