‘இதற்கு என்ன சால்ஜாப்பு சொல்லப்போகிறது தவெக’-கனிமொழி கேள்வி

தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் இரவு நேரத்தில் தப்பி ஓடிய சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக தற்பொழுது வரை நான்கு பேர் பிடிபட்டுள்ளனர். மீதமுள்ள சிறைவாசிகளை தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தேனி மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கி உள்ளது. காரணம் தமிழகத்திலேயே முதல் முறையாக 17 கைதிகள் ஒரே நேரத்தில் சிறையில் இருந்து தப்பிய இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களது கண்டனங்கள் மற்றும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திமுக எம்பி கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தளபதிவில், ‘தேனி மாவட்டம் தேக்கம்பட்டி சிறையில் காவலர்களைத் தாக்கிவிட்டு 17 கைதிகள் தப்பியோடியதாகச் செய்திகள் வருகின்றன. இந்த அரசால், குற்றவாளிகளைக் கைது செய்யவும் முடியவில்லை… சிறையில் உள்ள குற்றவாளிகளை பாதுகாக்கவும் முடியவில்லை! இதற்கு என்ன சால்ஜாப்பு சொல்லப்போகிறது தவெக-வின் POLICE IT WING?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.