பாலக்காடு: பாலக்காடு அருகே, 17 வயது சிறுவனுக்கு பஸ்சில் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், குற்றவாளிக்கு மூன்று

பாலக்காடு: பாலக்காடு அருகே, 17 வயது சிறுவனுக்கு பஸ்சில் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், குற்றவாளிக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, பட்டாம்பி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், பட்டாம்பி திருவேகப்புறா, நெடுங்கோட்டூர் பகுதியைச் சேர்ந்த வர் சுனில்குமார் 44. இவர், கடந்த 2023 ஜூன் 7ம் தேதி, பஸ்சில் சென்ற போது, 17 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இது குறித்து, சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், கொப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து சுனில்குமாரை கைது செய்தனர்.

இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று பட்டாம்பி போக்சோ நீதிமன்றத்தில் கூறப்பட்டது. அரசு தரப்பில் வக்கீல் சந்தீப் ஆஜரானார்.

இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி தினேசன் பிள்ளை, குற்றவாளிக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனையும், 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். அபராதத் தொகையை பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு நஷ்டஈடாக வழங்கவும் உத்தரவிட்டார்.

Source link