டென்ஷனான கிம் ஜாங் உன்.. தென்கொரியாவுடன் போரை தொடங்கும் வடகொரியா? எல்லையில் குவியும் பீரங்கிகள்

பியோங்யாங்: வடகொரியா – தென்கொரியா இடையே மோதல்போக்கு உள்ளது. இந்நிலையில் தான் திடீரென்று தனது எல்லையில் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் பீரங்கிகள், ராணுவ வீரர்களை குவித்து இருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளதோடு, நடந்து வரும் மோதலுக்கு நடுவே வடகொரியா அதிபர் கிம்ஜாங் உன் தென்கொரியாவிற்கு எதிராக போரை தொடங்க உள்ளாரா? என்ற பதற்றம் ஏற்பட்டுள்ளது.

வடகொரியாவும், தென்கொரியாவும் அண்டை நாடுகளாக உள்ளன. இருநாடுகளும் எல்லைகளை பகிர்ந்து கொள்கின்றன. ஆனால் இருநாடுகள் இடையே கடும் மோதல் உள்ளது. வடகொரியா அதிபராக இருக்கும் கிம் ஜாங் உன், தென்கொரியாவை கடுமையாக எதிர்த்து வருகிறார்.

அவ்வப்போது ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டி வருகிறார். இதனால் பயந்துபோன தென்கொரியா, அமெரிக்காவிடம் உதவி கேட்டது. தென்கொரியாவில் தற்போது அமெரிக்க படைகள் உள்ளன. தென்கொரியாவின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னை இன்னும் கோபப்படுத்தி உள்ளது. அமெரிக்காவிற்கும், வடகொரியாவிற்கும் இடையே ஏற்கனவே மோதல் உள்ள நிலையில் தென்கொரியாவின் இந்த செயல் தங்கள் நாட்டின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளதாக கிம் ஜாங் உன் நினைக்கிறார். இதனால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தென்கொரியாவை மிரட்டும் வகையில் ஏவுகணைகளை ஏவி வருகிறார் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்.

இந்நிலையில் தான் தற்போது தென்கொரியா – வடகொரியா இடையேயான மோதல் தீவிரமாகி உள்ளது. டென்ஷனின் உச்சத்திற்கு சென்றுள்ள வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் திடீரென்று 3 பீரங்கிகளை எல்லையில் குவித்துள்ளார். தென்கொரியா – வடகொரியா எல்லையில் 122 எம்எம் ஹாவிட்சர் பீரங்கிகளை வடகொரியா நிலை நிறுத்தி உள்ளது. இந்த பீரங்கிகளின் முனை தென்கொரியாவை நோக்கி உள்ளது.

அதுமட்டுமின்றி 20 முதல் 30 வடகொரியா ராணுவ வீரர்கள் வழக்கத்திற்கு மாறான செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் தென்கொரியா – வடகொரியா எல்லையில் ராணுவம் இல்லா மண்டலம் (Dimiitariesed Zone) பகுதியில் புதிதாக வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தென்கொரியாவிற்கு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த 2 செயல்கள் வடகொரியா – தென்கொரியா இடையே போர் பதற்றம் போன்ற சூழல் உருவாகி உள்ளது. இதுபற்றி தென்கொரியா தலைநகர் சியோலில் உள்ள கியுங்னம் பல்கலைக்கழ பேராசிரியர் லிம் யூல் சுல் கூறுகையில், ”வடகொரியா தனது பீரங்கிகளை இப்படி வெளிப்படையாக ஒருபோதும் உலகுக்கு காட்டியது இல்லை. இது மிகவும் வித்தியாசமான செயலாக உள்ளது.

இதன்மூலம் வடகொரியா ஒரு செயலை உலகுக்கு உணர்த்துகிறது. இனி பேச்சுவார்த்தைக்கு இடமில்லை. ராணுவ நடவடிக்கை மூலமாக தான் தனது எல்லை பிரச்சனைக்கு தீர்வு காண உள்ளோம் என்பதை உணர்த்த வடகொரியா இப்படி செய்திருக்கலாம்” என்றார்.