12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்

புதுடெல்லி: உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், தமிழ்நாடு, ராஜஸ்தான், சத்தீஸ்கர், கேரளா, குஜராத், மத்திய பிரதேசம், கோவா ஆகிய 9 மாநிலங்கள், புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவு ஆகிய 3 யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆர்) பல்வேறு கட்டங்களாக நடைபெற்றது. இப்பணி முற்றிலும் முடிவடைந்த நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் 27-ம் தேதி எஸ்ஐஆர் பணி தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அப்போது, இந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வாக்காளர் எண்ணிக்கை சுமார் 51 கோடியாக இருந்தது. எஸ்ஐஆர் நடவடிக்கைக்குப் பிறகு, வாக்காளர் எண்ணிக்கை சுமார் 44.92 கோடியாக உள்ளது. இது 6.08 கோடி குறைவு.

Source link