குடும்ப தலைவிகளுக்கு குட் நியூஸ்!அதிரடியாக குறையப் போகும் அரிசி விலை.! எவ்வளவு தெரியுமா.?

அண்டை மாநிலங்களான ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் நெல் அறுவடைப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அங்கிருந்து தமிழ்நாட்டிற்கு நெல் மூட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக நேற்று (அக்டோபர் 26) ஒரே நாளில் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் இருந்து 220 லாரிகளில் நெல் மூட்டைகள் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரிசி ஆலைகளுக்கு வந்துள்ளன.

அடுத்தடுத்த நாட்களில் நெல் மூட்டைகளின் வரவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நெல் மூட்டைகள் வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் சந்தையில் அரிசியின் விலை குறைய அதிக வாய்ப்புள்ளது.

தமிழ்நாட்டில் குறுவை சாகுபடி கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் மிவும் குறைவு. மேட்டூர் அணையை குறித்த நேரத்தில் திறக்காதது மற்றும் எல்-நினோ விளைவால் அதிக வெப்பம் உள்ளிட்ட காரணங்களால் நெல் சாகுபடி குறைந்தது. நெல் உற்பத்தி குறைவால் வரலாறு காணாத அளவில் அரிசியின் விலை உயர்ந்தது.

இந்த விலை உயர்வு நடுத்தர மக்களை அதிகம் பாதித்தது. தமிழ்நாட்டில் தற்போது வரை அரிசி விலை குறையாத நிலையில், அண்டை மாநிலங்களில் இருந்து வரும் நெல் மூட்டைகளின் வரவால் விரைவில் விலை குறையும் என உணவுத் துறை அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்துள்ளார்.

லாரிகள் வரும் போது அனைத்து செக்போஸ்டுகளிலும் சோதனை நிகழ்த்தப்பட்ட பின்னரே தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்கப்படுகின்றன எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

நெல் மூட்டைகள் வரத்து அதிகரிப்பால் தொடக்கத்தில் அரிசி விலை 20% குறைய வாய்ப்புள்ளது. அதாவது ரூ.2,000-க்கு விற்கப்படும் அரிசி மூட்டை ரூ.400 வரை குறையும். போகப் போக விலை சரிவு தொடர்ந்தால், அரிசி விலை மீண்டும் பழைய நிலைமைக்கே கூட திரும்பும்.

Source link