விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க 4,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய மின்வாரிய வணிக

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க 4,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய மின்வாரிய வணிக பெண் ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தாலுகா, ரெட்டணை அடுத்த நாரேரிகுப்பத்தை சேர்ந்தவர் ஹரி கிருஷ்ணன். இவர், தனது வீட்டிற்கு மின் இணைப்பு பெற ரெட்டணையில் உள்ள மின்வாரிய அலுவ லகத்தை அணுகினார்.

அங்கு பணியில் இருந்த மின்வாரிய ஆய்வாளர் ரேகா, 40; மின் இணைப்பு கொடுக்க 4,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் ஹரிகிருஷ்ணன் புகார் அளித்தார்.

லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., சரவணன், இன்ஸ்பெக்டர் ஈஸ்வரி ஆலோசனையின் பேரில் நேற்று மாலை 2:30 மணியளவில் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ஹரிகிருஷ்ணன், ரேகாவிடம் கொடுத்தார்.

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ரேகாவை கையும் களவுமாக பிடித்து அவரை கைது செய்தனர்.

லஞ்ச ஒழிப்பு போலீசார், பெண் அதிகாரியை கைது செய்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Source link