வெண்ணெய், நெய், ஸ்வீட் விலை உயர்வு: தீபாவளி நெருங்கும் வேளையில் ஆவின் வைத்த ஆப்பு

தீபாவளிப் பண்டிகைக் காலத்தில் இனிப்புகள் தயாரிப்பதற்கு நெய் மற்றும் வெண்ணெய் அதிக அளவில் தேவைப்படும் சூழலில், ஆவின் நிறுவனம் பால் பொருட்களின் விலையை அதிரடியாக உயர்த்திப் பொதுமக்களுக்கு ஆப்பு வைத்துள்ளது. முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான ஆட்சியில் ஆவின் நிறுவனம் மேற்கொண்டுள்ள இந்த முதலாவது விலை உயர்வு அக்டோபர் 28 முதல் அமலுக்கு வருகிறது.

தமிழ்நாட்டின் பாரம்பரியப் பண்டிகையான தீபாவளி நெருங்கி வரும் வேளையில், வீடுகளிலும் உணவகங்களிலும் பலகாரங்கள் மற்றும் ஸ்வீட்கள் செய்ய நெய் மற்றும் வெண்ணெய் வாங்குவோரின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரிக்கும். இத்தகைய பண்டிகைக் காலத்தில், அரசு கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனமான ஆவின், தனது நெய், வெண்ணெய், தயிர், இனிப்புகள், லஸ்ஸி மற்றும் குக்கீஸ் உள்ளிட்ட பால் பொருட்களின் விற்பனை விலையை உயர்த்தியுள்ளது இல்லத்தரசிகள் மற்றும் சாமானிய மக்களுக்குப் பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்தியுள்ளது.

முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான த.வெ.க ஆட்சியில் ஆவின் நிறுவனம் மேற்கொண்டுள்ள முதலாவது விலை உயர்வு இதுவாகும். இந்த புதிய மாற்றியமைக்கப்பட்ட விலைகள் அக்டோபர் 28, புதன்கிழமை முதல் அமலுக்கு வரும் என்று ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

ஆவின் பொருட்களின் புதிய விலை விவரங்கள்:நெய் (Ghee):100 மி.லி நெய் பாக்கெட் விலை ரூ.80-லிருந்து ரூ.95 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.   

200 மி.லி நெய் பாக்கெட் விலை ரூ.160-லிருந்து ரூ.180 ஆக அதிகரித்துள்ளது.   வெண்ணெய் (Butter):100 கிராம் வெண்ணெய் பாக்கெட் இனி ரூ.60-க்கு பதிலாக ரூ.70-க்கு விற்பனை செய்யப்படும்.   

மேலும் தயிர், பால் இனிப்புகள், லஸ்ஸி மற்றும் குக்கீஸ் போன்றவற்றின் புதிய விற்பனை விலைப் பட்டியலையும் ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. பண்டிகைக் காலத்தில் இனிப்புகள் தயாரிக்க நெய் மற்றும் வெண்ணெய் அதிக அளவில் தேவைப்படும் நிலையில், இந்த விலை உயர்வு இல்லத்தரசிகளுக்கும் பொதுமக்களுக்கும் பெரும் கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆவின் புதிய விலைப் பட்டியல் விவரம்:

வ.எண் பொருளின் பெயர் அளவு  புதிய விலை ரூ.
1 வெண்ணெய் – சி (Butter-C) 100 கிராம் 70.00
2 வெண்ணெய் – சி (Butter-C) 500 கிராம் 320.00
3 வெண்ணெய் – டி (Butter-T) 100 கிராம் 70.00
4 வெண்ணெய் – டி (Butter-T) 500 கிராம் 325.00
5 நெய் பாட்டில் (Ghee Jar) 50 மி.லி 55.00
6 நெய் பெட் பாட்டில் (Ghee Pet Jar) 100 மி.லி 95.00
7 நெய் பெட் பாட்டில் (Ghee Pet Jar) 200 மி.லி 180.00
8 நெய் பெட் பாட்டில் (Ghee Pet Jar) 500 மி.லி 400.00
9 நெய் பெட் பாட்டில் (Ghee Pet Jar) 1000 மி.லி 780.00
10 நெய் பெட் பாட்டில் (Ghee Pet Jar) 5 லிட்டர் 4000.00
11 நெய் டின் (Ghee Tin) 16.5 லிட்டர்/15 கிலோ 13,000.00
12 நெய் அட்டைப்பெட்டி (Ghee Carton) 500 மி.லி 390.00
13 நெய் அட்டைப்பெட்டி (Ghee Carton) 1 லிட்டர் 770.00
14 நெய் பாக்கெட் (Ghee Pouch) 100 மி.லி 90.00
15 நீண்ட நாள் குலாப் ஜாமூன் (L.L.Gulabjamun) 125 கிராம் 60.00
16 நீண்ட நாள் குலாப் ஜாமூன் (L.L.Gulabjamun) 250 கிராம் 115.00
17 ரசகுல்லா (Rasagulla) 100 கிராம் 50.00
18 ரசகுல்லா (Rasagulla) 200 கிராம் 95.00
19 பால்கோவா / கோவா (Khova) 100 கிராம் 60.00
20 பால்கோவா / கோவா (Khova) 250 கிராம் 150.00
21 பால்கோவா / கோவா (Khova) 500 கிராம் 280.00
22 இனிப்பில்லா பால்கோவா (US Khova) 1 கிலோ 650.00
23 பேரீச்சை பால்கோவா (Dates Khoa) 100 கிராம் 65.00
24 பேரீச்சை பால்கோவா (Dates Khoa) 250 கிராம் 155.00
25 ப்ரீமியம் மில்க் கேக் (Premium Milk Cake) 250 கிராம் 140.00
26 மைசூர்பாக் (Mysorepak) 250 கிராம் 160.00
27 மைசூர்பாக் (Mysorepak) 500 கிராம் 310.00
28 நெய் அல்வா (Ghee Halwa) 250 கிராம் 125.00
29 நட்ஸ் அல்வா (Nuts Halwa) 250 கிராம் 200.00
30 நெய் பாதுஷா (Ghee Badusha) 250 கிராம் 205.00
31 முந்திரி பிஸ்தா ரோல் (Kaju Pista Roll) 250 கிராம் 340.00
32 முந்திரி கத்லி (Kaju Katli) 250 கிராம் 280.00
33 கலப்பு இனிப்புகள் (Assorted Combo) 250 கிராம் 240.00
34 கலப்பு இனிப்புகள் பாக்கெட் (Assorted Pack Combo) 500 கிராம் 475.00
35 வெண்ணெய் முறுக்கு (Butter Murukku) 200 கிராம் 95.00
36 ஆவின் மிக்சர் (Aavin Mixture) 200 கிராம் 110.00
37 மில்க் பேடா (Milk Peda) 100 கிராம் 60.00
38 மில்க் பேடா (Milk Peda) 250 கிராம் 140.00
39 மில்க் ஷேக் (Milk Shake – அனைத்து வகைகள்) 200 மி.லி 35.00
40 மாவின் (Maavin) 200 மி.லி 25.00
41 மோர்பாக்கெட் (Butter Milk S) 200 மி.லி 10.00
42 மோர் பாட்டில் (Butter Milk PET) 200 மி.லி 14.00
43 யு.எச்.டி டோன்ட் பால் (UHT TM Milk) 150 மி.லி 12.00
44 யு.எச்.டி டோன்ட் பால் (UHT Toned Milk) 450 மி.லி 35.00
45 எஸ்.எம்.டி.பி (SMTP) 1000 மி.லி 90.00
46 டி.எம்.டி.பி (TMTP) 1000 மி.லி 75.00
47 பால் பவுடர் (SMP) 500 கிராம் 220.00
48 பால் பவுடர் (SMP) 1 கிலோ 450.00
49 யோகர்ட் (Yoghurt) 100 மி.லி 20.00
50 மாம்பழ யோகர்ட் பானம் (Drinking Yoghurt Mango) 200 மி.லி 30.00
51 ஸ்ட்ராபெரி யோகர்ட் பானம் (Drinking Yoghurt Strawberry) 200 மி.லி 30.00
52 லஸ்ஸி (Lassi) 200 மி.லி 23.00
53 புரோபயாடிக் லஸ்ஸி (Probiotic Lassi) 200 மி.லி 35.00
54 சாக்கோ லஸ்ஸி (Choco Lassi) 200 மி.லி 30.00
55 மாம்பழ லஸ்ஸி (Mango Lassi) 200 மி.லி 30.00
56 ப்ரீமியம் தயிர் கப் (Premium Curd Cup) 50 கிராம் 7.00
57 சாதா தயிர் (Curd Plain) 200 கிராம் 21.00
58 சிறப்பு தயிர் (Curd SPL) 200 கிராம் 33.00
59 தயிர் பாக்கெட் (Curd) 500 மி.லி 40.00
60 தயிர் பாக்கெட் 1 கிலோ 70.00
61 ப்ரீமியம் தயிர் பாக்கெட் (Premium Curd) 1 கிலோ 130.00
62 வெண்ணெய் பிஸ்கட் (Butter Cookies) 80 கிராம் 40.00
63 கஸ்டர்ட் பிஸ்கட் (Custard Cookies) 80 கிராம் 40.00
64 தேங்காய் பிஸ்கட் (Coconut Cookies) 80 கிராம் 40.00
65 சாக்கோ சிப்ஸ் பிஸ்கட் (Chocochips Cookies) 80 கிராம் 40.00
66 உப்பு பிஸ்கட் (Salt Cookies) 80 கிராம் 40.00
67 ஓட்ஸ் சர்க்கரையில்லா பிஸ்கட் (Oats Sugar Free Cookies) 80 கிராம் 40.00

தீபாவளிப் பண்டிகையை ஒட்டி ஆவின் நெய், வெண்ணெய் மற்றும் இனிப்பு பலகாரங்களின் விலையை உயர்த்தியுள்ள தமிழக வெற்றிக் கழக அரசுக்கு அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்கள் தீபாவளியைக் கொண்டாடும் நேரத்தில் இந்த விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழக மக்களுக்கு “வெற்றி தீபாவளி” பரிசாக ஆவின் நெய், வெண்ணெய், இனிப்பு பலகாரங்களின் விலையை கடுமையாக உயர்த்தி அறிவித்துள்ளது தமிழக வெற்றிக் கழக அரசு.
மக்கள் தீபாவளிக்கு அதிகமாக நெய், இனிப்புகளை வாங்குவார்கள் என்று தெரிந்தும், இப்போது சரியான நேரம் பார்த்து விலையை உயர்த்தி லாபம் பார்க்கலாம் என்று ஒரு அரசு நினைத்து செயல்படுவது என்ன மாதிரியான மனநிலை?
வியாபாரிகள் கூட இந்த நேரத்தில் மக்களுக்கு சில சலுகைகள் அளித்து விற்பனையை அதிகரிக்கப் பார்ப்பார்கள். ஆனால், இந்த அரசோ, சினிமாவில் வரும் கார்ப்பரேட் வில்லனைப் போல செயல்படுகிறது.

நடிகராக இருக்கும் பொது தீபாவளிக்கு வெளியாகும் விஜய் பட டிக்கெட்டுகளை விலை உயர்த்தி “பிளாக் டிக்கெட்”-ஆக விற்பது போல இனிப்புகளையும் தீபாவளி நேரம் பார்த்து உயர்த்தி விட்டீர்களோ? பழக்க தோஷத்தில் பிளாக்கில் விற்றுவிடாதீர்கள்.

“அதிகம் இனிப்பு சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும். அதைத் தடுக்கவே இந்த வெற்றி தீபாவளி திட்டம்” என்று பிரஸ் மீட் கொடுத்து உருட்ட எந்த அமைச்சரை ஈடுபடுத்தி செய்துள்ளீர்கள் தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களே ?

மக்கள் தீபாவளிப் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட, ஆவின் பால் பொருட்கள் மற்றும் இனிப்புகள் மீதான  இந்த விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்.” என்று எடப்பாடி பழனிசாமி காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Source link