தாய்லாந்து என்றாலே பேங்காக், புகெட் தானா? 99% பேருக்கு தெரியாத மறைக்கப்பட்ட சொர்க்கங்கள் லிஸ்ட்

இந்தியப் பயணிகளின் ஆல்-டைம் ஃபேவரிட் சுற்றுலாத் தலங்களில் ஒன்றான தாய்லாந்தில், குளிர்காலம் மற்றும் புத்தாண்டு நேரத்தில் பேங்காக், புகெட், பட்டாயா போன்ற இடங்கள் வழக்கத்தை விட கூட்ட நெரிசலுடன் காணப்படும். கூட்ட நெரிசலில் சிக்காமல், அமைதியான சூழலில் இயற்கை அழகையும் கலாச்சாரத்தையும் ரசிக்க விரும்புவோருக்கு தாய்லாந்தில் ஒளிந்திருக்கும் 4 விசித்திரமான, அமைதியான சுற்றுலாத் தலங்கள் குறித்து பார்க்கலாம்.

கூழாங்கற்களுக்கு நடுவே தொலைந்த இயர்பட்; எவ்வளவு தேடியும் கிடைக்கல: அப்புறம் என்ன ஆச்சு? இணையத்தை கலக்கும் சாட் ஜிபிடி மாயம்

சியாங் ராய் 

தாய்லாந்தின் வடக்குப் பகுதியில் அமைந்திருக்கும் சியாங் ராய், சில்லென்ற வானிலை மற்றும் மலைப்பகுதிகளுக்குப் பெயர் பெற்றது. இங்குள்ள பனி – வெள்ளை நிறத்தில் ஜொலிக்கும் ‘வெள்ளைக்கோயில்’ (Wat Rong Khun), அடர் நீல நிறத்தில் காட்சியளிக்கும் ‘நீலக்கோயில்’ மற்றும் ‘சுய் ஃபோங்’ (Choui Fong) தேயிலைத் தோட்டங்கள் பயணிகள் தவறவிடக் கூடாதவை.  கலாச்சாரம், இயற்கை அழகு மற்றும் குளிர்காலத்தை விரும்பும் தம்பதிகள் மற்றும் குடும்பங்களுக்கு இது ஏற்ற இடமாகும்.

செல்லும் வழி: பேங்காக்கில் இருந்து சியாங் ராய்க்கு நேரடி விமானங்கள் உள்ளன.

சியாங் கான் 

லோயி (Loei) மாகாணத்தில் உள்ள இந்த குட்டி நகரம், பிரம்மாண்டமான கேளிக்கைகளுக்குப் பதிலாக மரத்தாலான பழங்கால வீடுகள் மற்றும் மேகாங் நதியின் எழில் கொஞ்சும் அமைதிக்கு பெயர் பெற்றது. மாலையில் இயங்கும் வாக்கிங் ஸ்ட்ரீட் தெருக்களில் உள்ளூர் உணவுகளான காவோ பியாக் சென் நூடுல்ஸ் சூப்பை ருசிக்கலாம். நதிக்கு எதிரே லாவோஸ் நாட்டின் எல்லையைக் காணலாம். இரவில் கேளிக்கை இல்லாது, அமைதியான சூழலில் உள்ளூர் கலாச்சாரத்தை அனுபவிக்க விரும்பும் பயணிகளுக்கு இது ஏற்ற இடமாகும்.

செல்லும் வழி: பேங்காக்கில் இருந்து லோயி விமான நிலையத்திற்குச் சென்று, அங்கிருந்து காரில் செல்லலாம்.

கோ லந்தா 

புகெட்டின் அலைகளையும் கூட்டத்தையும் தவிர்க்க விரும்பும் பீச் பிரியர்களுக்கு கிராபி  மாகாணத்தில் உள்ள கோ லந்தா தீவு சிறந்த தேர்வு. நீண்ட மணல் பரப்புகள், அடர்ந்த மாங்க்ரோவ் காடுகள் மற்றும் தேசியப் பூங்காக்கள் இங்கு உள்ளன. இங்கு இரவு நேரக் கேளிக்கைகளை விட இயற்கையோடு ஒன்றிய அமைதியே அதிகம். தம்பதிகள், குடும்பங்கள் மற்றும் கடலில் நீந்த விரும்பும் ஸ்னார்க்கலிங் பிரியர்களுக்கு இது ஏற்ற இடமாகும்.

செல்லும் வழி: பேங்காக்கில் இருந்து கிராபி விமான நிலையம் சென்று, அங்கிருந்து படகு மூலம் தீவை அடையலாம்.

காவோ லாக் 

பாங் ஙா மாகாணத்தில் அமைந்திருக்கும் காவோ லாக், கடல் மற்றும் காடுகள் சார்ந்த இயற்கை அனுபவங்களை ஒரே இடத்தில் வழங்குகிறது. ‘காவோ லாக் – லாம் ரூ’ தேசியப் பூங்காவின் நீர்வீழ்ச்சிகள், காடுகள் மற்றும் புகழ்பெற்ற சிமிலன் தீவுகளுக்கு செல்வதற்கான படகுப் பயணங்கள் இங்கு சிறப்பு வாய்ந்தவை ஆகும். இயற்கை விரும்பிகள் மற்றும் அமைதியான முறையில் ரிசார்ட்டில் தங்கி ஓய்வெடுக்க நினைப்பவர்களுக்கு இது எற்ற இடமாகும்.

செல்லும் வழி: புகெட் சர்வதேச விமான நிலையத்திற்கு சென்று, அங்கிருந்து 1-2 மணி நேர கார் பயணத்தில் காவோ லாக்கை அடையலாம்.

Source link