திருப்பதி,
உலக நலனுக்காக திருப்பதி கபிலேஸ்வர சுவாமி கோவிலில் அடுத்த மாதம் (நவம்பர்) 10 முதல் டிசம்பர் மாதம் 8-ந்தேதி வரை ஒரு மாதம் முழுவதும் கார்த்திகை மாத சிறப்பு ஹோம பூஜைகள் நடக்கின்றன. கணபதி ஹோமம், சுப்பிரமணிய ஹோமம், நவகிரக ஹோமம், சண்டி ஹோமம் மற்றும் ருத்ர ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் நடத்தப்படும்.
நவம்பர் மாதம் 15-ந்தேதி வள்ளி-தேவசேனா சமேத சுப்பிரணிய சுவாமி திருக்கல்யாணமும், டிசம்பர் மாதம் 7-ந்தேதி சிவன்-பார்வதி திருக்கல்யாணமும் நடக்கின்றன.
500 ரூபாய் கட்டணம்
ஹோமம் அல்லது திருக்கல்யாண நிகழ்வில் பங்கேற்க ரூ.500 கட்டணம் செலுத்த வேண்டும். ஒரு டிக்கெட்டில் இருவர் பங்கேற்கலாம். ஹோமத்தில் பங்கேற்பவர்கள் பாரம்பரிய உடைகளை அணிந்து வருவது கட்டாயமாகும். பக்தர்கள் இத்தகைய வழிபாட்டு நிகழ்ச்சிகளில் எளிதாகப் பங்கேற்கும் வகையில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் 2012-ஆம் ஆண்டு முதல் இத்தகைய கூட்டு ஹோமங்களை நடத்தி வருகிறது. இத்தகவலை திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
