டில்லி பேரணியில் கர்ப்பிணி பத்திரிகையாளர் மீது தாக்குதல்; ராகுலுக்கு சுப்ரீம்கோர்ட் நோட்டீஸ்

-நமது டில்லி நிருபர்-

கடந்த அக்டோபர் 12ம் தேதி, எஸ்ஐஆர் பணிகளுக்கு எதிராக டில்லியில் நடந்த பேரணியில் ராகுல் தலைமையில் இண்டி கூட்டணி கட்சி எம்பிக்கள் பேரணி நடத்தினர். அங்கு செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ‘ஒன்இந்தியா’ செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் பத்திரிகையாளர் ரிச்சா பராஷர் என்பவரை ராகுல் பிடித்து தள்ளி விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

3 மாத கர்ப்பிணிப் பத்திரிகையாளர், ராகுல் மீது எப்ஐஆர் பதிவு செய்யக் கோரி சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். பேரணியின்போது, ​​தான் 11 வாரங்கள் மற்றும் 3 நாட்கள் கர்ப்பமாக இருந்த போதும், என்னை பிடித்து ராகுல் கீழே தள்ளி விட்டார்; ராகுல் மீது எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும்.

இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இன்று (அக்டோபர் 27) வழக்கை, சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிபதி ஜாய்மால்யா பாக்சி விசாரித்தனர். இந்த புகார் குறித்து விளக்கம் அளிக்குமாறு ராகுலுக்கும், இதர நபர்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Source link