Puduherry Diwali Bonus,அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் ரூ.7,000 வரை கிடைக்கும்: புதுச்சேரி அரசு அறிவிப்பு – diwali bonus announced for puducherry govt employees benefit up to 7000 rupees

புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை சமயத்தில் அரசு ஊழியர்களுக்கு போனஸ் உள்ளிட்ட சலுகைகள் அறிவிக்கப்படும். பல்வேறு மாநில அரசுகள் போனஸ் அறிவிப்புகளை வெளியிடும். அந்த வகையில் சற்று முன் புதுச்சேரி அரசு தனது மாநில அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவித்துள்ளது. இதனால் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், புதுச்சேரி அரசு தற்போது ஊழியர்களுக்குப் பண்டிகை போனஸ் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் மூலம் புதுச்சேரியில் உள்ள பி மற்றும் சி பிரிவு அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள். 2025 – 26 காலகட்டத்தில் குறைந்தபட்சம் தொடர்ச்சியாக 6 மாதங்கள் அரசுப் பணியில் இருந்தவர்கள் இந்த போனஸ் பெறத் தகுதியுடையவர்கள் ஆவர். அரசு ஊழியர்களுக்கு அதிகபட்சமாக ரூ. 7,000 போனஸாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு ஊழியர்கள்எதிர்பார்ப்பு!

தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு இதுவரை போனஸ் அறிவிக்கப்படவில்லை. பொதுவாக, அரசு ஊழியர்களுக்கான தீபாவளி போனஸ் அறிவிப்பு பண்டிகை நாளுக்கு 2 முதல் 4 வாரங்களுக்கு முன்னதாகவே தமிழ்நாடு அரசால் வெளியிடப்படும். இதனால், இந்த ஆண்டுக்கான போனஸ் அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் தமிழக அரசு ஊழியர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Source link