பாஜக எடுத்த சர்வே முடிவுகள்: ஆட்சிக்கு 115 இடங்கள் கன்ஃபார்ம்- கர்நாடக உள்ளாட்சி தேர்தலுக்கு வியூகம் – will bjp capture power in karnataka with private survey and plans for local body polls 2027

தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், பாஜக சீக்ரெட் சர்வே ஒன்றை நடத்தியிருப்பதாக விஜயேந்திரா தெரிவித்துள்ளார். இந்த சூழலில் தற்போது தேர்தல் வைத்தால் கூட பாஜகவால் தனித்து வெற்றி பெற முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கர்நாடகாவில் உடனடியாக சட்டப்பேரவை தேர்தல் வரப் போகிறதா? என்று கேட்டால் இல்லை என்ற பதில் தான் கிடைக்கும். ஏனெனில் 2028ஆம் ஆண்டில் தான் அடுத்த பொதுத்தேர்தல். இந்த சூழலில் பாஜக மாநிலத் தலைவர் விஜயேந்திரா தெரிவித்துள்ள விஷயம் பெரிதும் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. அக்கட்சி சார்பில் நடத்தப்பட்ட சீக்ரெட் சர்வே ஒன்றில், தற்போது தேர்தல் நடத்தினால் கூட மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 115 இடங்களில் வென்று பாஜக தனிப்பெரும் கட்சியாக ஆட்சி அமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கர்நாடகா பாஜக தலைவர் விஜயேந்திரா சர்வே

விஜயேந்திராவின் வியூகம் இரண்டு ஆண்டுகள் கழித்து வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கானது அல்ல. அடுத்த சில மாதங்களில் வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலை ஒட்டியது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். இதற்கு பலம் சேர்க்கும் வகையிலும், தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை விதைக்கும் வகையிலும் சர்வே முடிவுகள் அமைந்திருக்கின்றன.

கேரளா தேர்தல் முடிவுகள் விரிவான பகுப்பாய்வு!

உள்ளாட்சி தேர்தலுக்கு ரெடியாகும் கர்நாடகா

கர்நாடகாவில் 6,000க்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகள், 239 தாலுகா பஞ்சாயத்துகள், 31 ஜில்லா பஞ்சாயத்துகள், மாநகராட்சிகள், கிரேட்டர் பெங்களூரு ஆணையம் ஆகியவற்றுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும். வரும் டிசம்பர் அல்லது 2027 ஜனவரியில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பெருவாரியான இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்பதில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது.

இதையொட்டி கர்நாடகா பாஜக பொறுப்பாளர் ஹரிஷ் திவேதி தலைமையிலான நிர்வாகிகள் குழு கோலார், சித்ரதுர்கா உள்ளிட்ட பல மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாஜகவினருக்கு உத்வேகம் அளித்துள்ளது. உள்ளாட்சி தேர்தலில் எத்தகைய வியூகத்துடன் செயல்பட வேண்டும் என செயல்திட்டங்களை அளித்துள்ளனர். ஆளும் காங்கிரஸ் அரசு மீது காவிரி நதிநீர் விவகார, ஓபிசி இட ஒதுக்கீடு போன்ற விஷயங்களில் அதிருப்தி நிலவி வருகிறது. இதை சரியாக பயன்படுத்தி கொள்ள பாஜக கணக்கு போடுகிறது.

உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸிற்கு சாதகமான அம்சங்கள்

குடும்ப தலைவிகளுக்கு மாதாந்திர தொகை ரூ.2,000, அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் போன்ற திட்டங்கள் ஆளுங்கட்சி மீது நல்ல பெயரை பெற்று தந்துள்ளது. குறிப்பாக பெண்கள் மற்றும் ஏழை, எளிய மக்கள் மத்தியில் ஆதரவு அலை வீசுகிறது. எனவே கிராமப்புறங்களில் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கக் கூடும். மத்திய, வடக்கு கர்நாடகாவில் உள்ள கிராமப்புற பகுதிகளில் காங்கிரஸிற்கு பாரம்பரியமாகவே நல்ல செல்வாக்கு இருந்து வருகிறது. பெங்களூரு மாநகராட்சியை மறுசீரமைத்தது, உள்ளாட்சிகளில் வார்டு வரையறை, இட ஒதுக்கீடு, எல்லை வரையறை போன்ற விஷயங்கள் காங்கிரஸிற்கு சாதகமாக மாறும் என்கின்றனர்.

பாஜகவிற்கு களம் சாதகமாக மாறுமா?

பாஜக – மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணியானது ஓல்டு மைசூரு மண்டலத்தில் செல்வாக்கு பெற்று விளங்குகிறது. பெங்களூருவின் சில பகுதிகள், கடலோர கர்நாடகா, நகர்ப்புற பகுதிகளில் பாஜகவிற்கு செல்வாக்கு உள்ளது. மேலும் உள்கட்டமைப்பு வசதிகளில் நிலவும் குறைபாடுகள் ஆளுங்கட்சிக்கு எதிராக காணப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளில் ஆட்சி மீதான அதிருப்தி சற்று அதிகரித்துள்ளது. வறட்சி நிவாரணத் தொகை, காவிரி, கிருஷ்ணா நதிநீர் பிரச்சினை போன்றவற்றை காங்கிரஸ் அரசுக்கு எதிராக பாஜக கையிலெடுக்கும்.

Source link