ஜனப்பன்சத்திரம் கூட்டுச்சாலையில் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்கப்படுமா?

Summary

ஜனப்பன்சத்திரம் கூடுச்சாலையில் பயணிகள் காத்திருந்து செல்ல பஸ்நிறுத்தம் நிழற் குடை இல்லாததால் சாலையின் ஓரத்தில் நான்கு திசைகளிலும் மழை, வெயிலில் காத்திருந்து செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.

கும்மிடிப்பூண்டி

பொன்னேரி அடுத்த ஜனப்பன்சத்திரம் கூட்டு சாலையில் இருந்து சென்னை, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர், திருப்பதி, பெரியபாளையம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பல பகுதிகளுக்கு சுற்றுவட்டார பகுதி கிராம மக்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி-கல்லூரிக்கு செல்பவர்கள் சென்று வருகின்றனர்.

ஜனப்பன்சத்திரம்

இதனால் ஜனப்பன்சத்திரம் கூட்டுசாலையில் எப்போதும் போக்குவரத்து பரபரப்பாக இருக்கும். ஆனால் ஜனப்பன்சத்திரம் கூடுச்சாலையில் பயணிகள் காத்திருந்து செல்ல பஸ்நிறுத்தம் நிழற் குடை இல்லாததால் சாலையின் ஓரத்தில் நான்கு திசைகளிலும் மழை, வெயிலில் காத்திருந்து செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் பயணிகள் கடும் சிரமம் அடைந்து வருகிறார்கள்.

இதுகுறித்து பயணிகள் கூறும்போது,

ஜனப்பன்சத்திரம் கூட்டுச்சாலையில் இருந்து தினமும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள். இங்கு பஸ் நிறுத்தம், நிழற்குடை இல்லை. இதனால் பயணிகள் சாலையோரம் நின்று காத்திருந்து பயணம் செய்து வருகின்றனர். சாலை விரிவாக்க பணிக்காக பேருந்து நிழற்குடை கடந்த 10 வருடத்திற்கு முன்பு அகற்றப்பட்டது.

பொன்னேரி

பின்னர் அமைக்கப்படவில்லை. வெயிலிலும் மழையிலும் வயதானவர்கள், பெண்கள் நின்றபடி காத்திருந்து பயணம் செய்து வருகின்றனர். மழை, வெயில் காலங்களில் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தின் கீழ் ஒதுங்கி நின்று கொள்கிறோம். பின்னர் பஸ் வருவதைப் பார்த்து பயணிகள் ஓடிச் செல்கிறார்கள். இதனால் பயணிகள் தவறி விழுந்து அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. நிழற்குடை அமைக்க கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனை பொன்னேரி எம்.எல்.ஏ. ஆய்வு செய்து இப்பகுதியில் பஸ்நிறுத்த நிழற்குடை மற்றும் பொது கழிப்பிடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Source link