தண்ணீர் லாரி மோதி கணவர் கண்முன் மனைவி பலி

Summary

தகவல் அறிந்ததும் மதுரவாயல் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து வந்து பலியான நிர்மலாவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

சென்னை மதுரவாயல், கங்கா நகர் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார். மருந்து கடை ஊழியர். இவரது மனைவி நிர்மலா(வயது50). இன்று காலை கணவன்-மனைவி இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வடபழனி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

விபத்து

வளசரவாக்கம், ஆற்காடு சாலையில் வந்து கொண்டு இருந்த போது அவ்வழியே வந்த தண்ணீர் டேங்கர் லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சிவக்குமாரும், அவரது மனைவி நிர்மலாவும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கிய நிர்மலா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை கண்டு அவரது கணவர் சிவக்குமார் கதறி துடித்தார். அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மனைவியின் உடலை பார்த்து அவர் கதறி அழுதது பார்ப்பவர்களை கண்கலங்க வைத்தது.

போலீசார்

விபத்து நடந்ததும் லாரியை ஓட்டி வந்த டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். தகவல் அறிந்ததும் மதுரவாயல் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து வந்து பலியான நிர்மலாவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மேலும் விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

Source link