10,000 பெண்களுக்கு விலையில்லாமல் கறவை மாடுகள் வழங்கும் திட்டம்: அரசாணை வெளியிட்ட தவெக அரசு – tvk government issues new go order to provide free milch cows to 10000 women

ஊரகப் பகுதிகளில் வாழும் பெண்களின் வாழ்வாதாரத்தினை உறுதிசெய்திடவும், ஒவ்வொரு ஆண்டும் 10,000 தகுதிவாய்ந்த பெண்களுக்கு கறவைமாடுகள் விலையில்லாமல் வழங்கப்படும் என அமைச்சர் மரியவில்சன் தெரிவித்தார். அதன்படி தற்போது இத்திட்டத்திற்கு அரசாணை வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு அரசின் 2026-27ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை மாநில நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் கடந்த மாதம் ஆகஸ்ட் 05 ஆம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். அப்போது ஊரகப் பகுதிகளில் வாழும் பெண்களின் வாழ்வாதாரத்தினை உறுதிசெய்திடவும், ஒவ்வொரு ஆண்டும் 10,000 தகுதிவாய்ந்த பெண்களுக்கு கறவைமாடுகள் விலையில்லாமல் வழங்கப்படும்” என்று அறிவித்தார்.

பால்வளத்துறை சார்பில் வழங்கல்

நிதிநிலை அறிக்கையின் பால்வளத்துறைக்கான அறிவிப்புகளில், பால் உற்பத்தியினை மேலும் அதிகரிக்கவும், ஊரகப் பகுதிகளில் வாழும் பெண்களின் வாழ்வாதாரத்தினை உறுதி செய்திடவும், ஒவ்வொரு ஆண்டும் 10,000 தகுதி வாய்ந்த பெண்களுக்கு விலையில்லா கறவை மாடுகள் வழங்கப்படும். இதற்காக, திருத்த வரவு – செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 57 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனத் அப்போது தெரிவிக்கப்பட்டது.

அரசாணை வெளியீடு

இதுகுறித்து தமிழக அரசு சார்பில் ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அந்த ஆணையில், நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் மரியவில்சன் 2026-27ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில், “தமிழ்நாடு பால் உற்பத்தியிலும், பால் கொள்முதல் செய்வதிலும், தேசிய அளவில் முன்னிலையில் உள்ளது. பால் உற்பத்தியினை மேலும் அதிகரிக்கவும், ஊரகப் பகுதிகளில் வாழும் பெண்களின் வாழ்வாதாரத்தினை உறுதிசெய்திடவும், ஒவ்வொரு ஆண்டும் 10,000 தகுதிவாய்ந்த பெண்களுக்கு கறவைமாடுகள் விலையில்லாமல் வழங்கப்படும்” என்று அறிவித்தார்.

அந்த செயல்படுத்திடும் அறிவிப்பினைச் வகையில், ஊரகப் பகுதிகளில் வாழும் தகுதிவாய்ந்த 10,000 பெண்களுக்கு விலையில்லாமல் கறவை மாடுகள் வழங்குவதற்காக 2026-27ஆம் நிதி ஆண்டிற்கு 57 கோடி ரூபாய்க்கான நிர்வாக மற்றும் நிதி ஒப்பளிப்பு செய்து தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

திட்டத்தின் நோக்கங்கள்

ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த பெண்களுக்கு விலையில்லாக் கறவை மாடுகளை வழங்கும் இத்திட்டமானது, சிறப்பான உற்பத்தித் திறன்கொண்ட பால் சொத்துகளை உருவாக்குல் அதன் மூலம் ஊரகப் பெண்களின் வாழ்வாதாரத்தையும் வருமானத்தையும் மேம்படுத்துதல் மாநிலத்தில் பால் உற்பத்தியை அதிகரித்தல், பால் கூட்டுறவு நிறுவனங்களை வலுப்படுத்துதல் அறிவியல்பூர்வமான பால் பண்ணை முறைகளை ஊக்குவித்தல் குடும்ப ஊட்டச்சத்து பாதுகாப்பை மேம்படுத்துதல் நிலையான வருமானம் ஈட்டும் நடவடிக்கைகள் மூலம் பெண்களுக்கு அதிகாரமளிப்பதை ஊக்குவித்தல்ஆகியவற்றை நோக்கங்களாகக் கொண்டுள்ளது.

கலப்பின மாடு வழங்கல்

இத்திட்டத்தின் கீழ். ஒவ்வொரு பயனாளிக்கும் குறைந்தபட்சம் நாளொன்றுக்கு 8 லிட்டர் பால் கறக்கும் திறனுள்ள ஒரு ஆரோக்கியமான, அதிக பால் தரும் கலப்பினக் கறவை மாடு வழங்கப்படும்.

பொருளாதார நன்மைகளுக்கு வழிவகுக்கும்

இதன்மூலம் பயனாளி குடும்பத்திற்கு வழக்கமான வருமான ஆதாரம் உறுதி செய்வதுடன், முறையான கால்நடை பராமரிப்பு மற்றும் அறிவியல் மேலாண்மை ஆகியவற்றின் மூலம், ஐந்தாண்டு காலத்தில் ஒவ்வொரு மாடும் மூன்று முதல் நான்கு கன்றுகளை ஈனும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இது நீண்ட காலச் சொத்து உருவாக்கம் மற்றும் நிலையான பொருளாதார நன்மைகளுக்கும் வழிவகுக்கும் என அந்த ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source link