ரூ.100 கோடி கூடுதலாக லாபம் ஈட்டியது 'சிப்காட்'

சென்னை: தமிழக அரசின், ‘சிப்காட்’ எனப்படும் தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் நிகர லாபம், கடந்த ஆண்டில் 100 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் தொழில் தொடங்கும் பெரிய நிறுவனங்களுக்கு தேவைப்படும் உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய தொழில் பூங்காக்களை ‘சிப்காட்’ உருவாக்கி ஒதுக்கீடு செய்கிறது. அந்த பூங்காக்களில் உள்ள ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்க விடுதிகளையும் அமைக்கிறது.

இது போன்றவற்றால், அந்நிறுவனத்திற்கு வருவாய் கிடைக்கிறது. கடந்த, 2025 – 26ல் சிப்காட் நிறுவனத்தின் வருவாய், 2,028 கோடி ரூபாயாகவும், செலவுகள், 1,674 கோ டி ரூபாயாகவும் இருந்தது.

நிகர லாபம் கடந்த, 2025 – 26ல், 267.38 கோடி ரூபாயாக அதி கரித்துள்ளது. இது, 2024 – 25ல், 166.73 கோடி ரூபாயாக இருந்தது. ஓராண்டில் கூடுதலாக, 100.65 கோடி ரூபாய் லாபம் அதிகரித்துள்ளது.

செலவு குறைப்பு நடவடிக்கை, துாத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் புதிய தொழில் பூங்காக்களில் மனைகள் குத்தகைக்கு வழங்கியது ஆகியவை இதற்கு முக்கிய காரணம்.

Source link