கர்நாடகாவில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு; 1 கோடி வாக்காளர்கள் நீக்கம்

பெங்களூரு: கர்நாடகாவில் எஸ்ஐஆர் நடவடிக்கையால் 1 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர்.

வாக்காளர் பட்டியலில் இருமுறை பெயர் இடம்பெற்றவர்கள், வேறு மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்தவர்கள், இறந்தவர்கள், முகவரி மாறியவர்களை கண்டறிந்து அவர்களின் பெயர்களை எஸ்ஐஆர் நடவடிக்கையின் வழியாக வாக்காளர்கள் பட்டியலில் இருந்து தேர்தல் கமிஷன் நீக்கி வருகிறது.

ஒவ்வொரு மாநிலத்திலும், யூனியன் பிரதேசத்திலும் இதுதொடர்பான பணிகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, கர்நாடகாவில் எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு பின்னர் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் 1 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர்.

இறுதி வாக்காளர் பட்டியலில் 2.25 கோடிக்கும் அதிகமான ஆண்கள், 2.29 கோடி பெண்கள் மற்றும் 2841 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 4.55 கோடி வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு முன்பாக 5.54 கோடி வாக்காளர்கள் இருந்தனர். 18 முதல் 19 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் 6.83 லட்சம் பேர் உள்ளனர். 85 வயதை கடந்த 3.92 லட்சம் வாக்காளர்களின் பெயர்களும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

Source link