TN Diwali Bonus,தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: முதல்வர் விஜய் சூப்பர் அறிவிப்பு – tamil nadu govt employees to get 20 percent diwali bonus check who will benefit

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு நடப்பாண்டுக்கான தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகையை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி, மொத்தம் 20 சதவீதம் வரை போனஸ் மற்றும் கருணைத் தொகை (Ex-gratia) வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின்படி, ஊழியர்களுக்கு 8.33 சதவீத போனஸும், 11.67 சதவீத கருணைத் தொகையும் சேர்த்து மொத்தமாக 20 சதவீதம் வரை வழங்கப்படும். தகுதியுள்ள நிரந்தர ஊழியர்களுக்கு குறைந்தபட்ச தொகையாக 8,400 ரூபாயும், அதிகபட்சமாக 16,800 ரூபாயும் வழங்கப்படும். முந்தைய ஆண்டுகளைப் போலவே இந்த முறைக்கும் முறைப்படுத்தப்பட்ட PSU ஒதுக்கீட்டின் அடிப்படையில் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் இதன் மூலம் பயனடைவார்கள். லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்கள், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO), போக்குவரத்துக் கழகங்கள், நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களைச் சார்ந்த ஊழியர்களுக்கு இந்த தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகை கிடைக்கும்.

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் (PSU) பணிபுரியும் ‘C’ மற்றும் ‘D’ பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 2025–26ஆம் ஆண்டுக்கான 20% வரை மிகை ஊதியம் (Bonus) மற்றும் கருணைத் தொகை (Ex-gratia) வழங்கிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் (PSU) பணிபுரியும் ‘C’ மற்றும் ‘D’ பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 2025–26ஆம் ஆண்டுக்கான 20% வரை மிகை ஊதியம் (Bonus) மற்றும் கருணைத் தொகை (Ex-gratia) வழங்கிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

அறிவிப்பின் முக்கிய அம்சங்கள்!

தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பொதுத்துறை நிறுவனங்கள், வாரியங்கள் மற்றும் கூட்டுறவு அமைப்புகளில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு நிரந்தர மற்றும் தற்காலிக ஊழியர்கள். தகுதியுள்ள நிரந்தரத் தொழிலாளர்கள் குறைந்தபட்சமாக ரூ. 8,400 முதல் அதிகபட்சமாக ரூ. 16,800 வரை பெறுவர். இதனால் சுமார் 2 லட்சத்து 60 ஆயிரத்து 497 தொழிலாளர்கள் பயனடைவர். இதற்காக அரசு சார்பில் 367 கோடியே 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களின் உபரித் தொகை அடிப்படையில், 8.33% மிகை ஊதியம் மற்றும் 11.67% கருணைத் தொகை சேர்த்து மொத்தம் 20% வழங்கப்படும். தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் , அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் ஊழியர்களுக்கு மொத்தம் 20% வழங்கப்படும். லாப ஈட்டுத்தொகை இல்லாத நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு 8.33% குறைந்தபட்ச மிகை ஊதியம் மற்றும் 1.67% கருணைத் தொகை சேர்த்து மொத்தம் 10% வழங்கப்படும். தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் சென்னை குடிநீர் வழங்கல் வாரிய ஊழியர்களுக்கு 10% (8.33% போனஸ் + 1.67% கருணைத் தொகை) வழங்கப்படும். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்களுக்கு 8.33% மிகை ஊதியம் வழங்கப்படும். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்குத் தனிப்படியாக ரூ. 3,000 கருணைத் தொகையாக வழங்கப்படும்.

மகிழ்ச்சியுடன் தீபாவளி கொண்டாட்டம்!

மாநிலத்தின் தொழில் வளர்ச்சி, உற்பத்தி மற்றும் பொருளாதார முன்னேற்றத்தில் தொழிலாளர்களின் அயராத உழைப்பும் அர்ப்பணிப்பும் மிக முக்கியமானவை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த தீபாவளி போனஸ் அறிவிப்பு, தொழிலாளர்கள் மேலும் உற்சாகமாகவும் ஊக்கத்துடனும் பணியாற்றவும், எதிர்வரும் தீபாவளிப் பண்டிகையைத் தங்கள் குடும்பத்தினருடன் மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடவும் வழிவகை செய்யும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், கூட்டுறவு அமைப்புகளில் பணிபுரிவோருக்கான தனி ஆணைகள் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source link