நடிகர் இம்ரான் கான் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டாம்.. இடைக்கால தடை போட்ட மும்பை ஹைகோர்ட்

மும்பை: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்ய வேண்டும் என்று அமெரிக்க குடியுரிமை பெற்ற நடிகர் இம்ரான் கான் கடந்த 10ம் தேதி மும்பையில் போராட்டம் நடத்தி கைதானர். இதையடுத்து அக்டோபர் 28ம் தேதிக்குள்(நாளை) நாட்டை விட்டு வெளியேற நடிகர் இம்ரான் கானுக்கு நோட்டீஸ் அனுப்பபப்பட்ட நிலையில் அதற்கு நவம்பர் 2ம் தேதி வரை இடைக்கால தடை விதித்து இன்று மும்பை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. இதனால் நடிகர் இம்ரான் கான் நவம்பர் 2 வரை இந்தியாவிலேயே இருக்கலாம்.