லட்சுமி ப்ரியா மாதிரி ஷாமாவை ஏன் ஒயில்டு கார்டு மூலம் கூட்டிட்டு வரக் கூடாது பிக் பாஸ்?

ஷாமாவை எதிர்பார்க்கவில்லை: பிக் பாஸ் 10 நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் போட்டியாளர்களில் கிராண்டு ஃபினாலே வரை வருவார் என சக போட்டியாளர்களும், பார்வையாளர்களும் நம்பியவர் தான் ஷாமா. பிக் பாஸ் தி காமன்மேன் மூலம் தேர்வு செய்யப்பட்ட அவர் பிரபலங்கள் இருக்கிறார்களே என்றெல்லாம் பார்த்து பயப்படாமல் தைரியமாக கேம் ஆடி வந்தார்.

தன் உயரத்தை சாதமாக பயன்படுத்தி சக போட்டியாளர்களை வந்து பார் என வாய் பேசும் ஜேசனுக்கு டஃப் கொடுத்தவர் ஷாமா. ஜேசன் ஓவராக பேசினால் பதிலுக்கு பேசி அவரை ஆஃப் செய்து வந்தார். இந்நிலையில் அந்த ஷாமாவிடம் எவிக்ஷன் ஃப்ரீ பாஸ் இருந்தும் கூட தன்னை வெளியேற்ற மாட்டார்கள் என்கிற நம்பிக்கையில் அவர் அதை பயன்படுத்தாத நேரத்தில் வெளியேற்றிவிட்டார்கள்.

ஷாமா கம்பேக்: இந்த சீசனில் தான் மாற்றம் என்பதை மந்திரமாக வைத்திருக்கிறார்களே. வெளியே அனுப்பி வைக்கப்படும் போட்டியாளர்களை ஒயில்டு கார்டு மூலம் அழைத்து வந்து போட்டியாளர்களை அதிர வைத்து வேடிக்கை பார்க்கிறார் பிக் பாஸ். சவின்யா, ஜாவித், லட்சுமி ப்ரியா ஆகியோரை வெளியேற்றிய பிறகும் கூட ஒயில்டு கார்டு ஆட்களாக அழைத்து வந்தார்கள்.

அப்படி திரும்பி வந்த மூன்று பேரில் லட்சுமி ப்ரியா தாக்குப்பிடித்து தங்கிவிட்டார். சவின்யா மற்றும் ஜாவித் மீண்டும் வெளியேற்றப்பட்டார்கள். லட்சுமி ப்ரியாவுடன் ஒப்பிடும்போது ஷாமா எவ்வளவோ பெட்டர். ஷோவுக்காக நிறைய கன்டன்ட் கொடுத்திருக்கிறார். அதனால் ஷாமாவையும் ஒயில்டு கார்டு மூலம் திரும்ப அழைத்து வாங்க என பிக் பாஸிடம் பார்வையாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

இந்த வாரம் ஷாமா வருவார் என்றே அனைவரும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள். இந்நிலையில் ஏற்கனவே ஏகப்பட்ட ஒயில்டு கார்டு என்ட்ரியாகிவிட்டதே. இனியும் ஒயில்டு கார்டு என்ட்ரி இருக்குமா என பிக் பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் கேட்டதற்கு, கண்டிப்பாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்கள். ஆனால் ஷாமா ரிட்டர்ன் வருவாரா என்பதை அவர்கள் உறுதி செய்யவில்லை.

ஷாமா ஸ்டோரீஸ்: பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு இன்ஸ்டாகிராமில் இதுவரை எந்த போஸ்ட்டும் போடாமல் இருக்கிறார் ஷாமா. அதே சமயம் தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து ஸ்டோரி மட்டும் போட்டார். இந்நிலையில் கிளம்புவதற்கு முன்பு மேடையில் வைத்து ரம்யா கிருஷ்ணன் தன்னை பாராட்டிய வீடியோவை இன்ஸ்டா ஸ்டோரியாக வெளியிட்டு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஷாமா கிளம்பியபோது பிக் பாஸே அவரை பயங்கரமாக பாராட்டினார். நீங்கள் என்னுடைய சிங்கப் பெண் என தெரிவித்தார். வேறு எந்த போட்டியாளருக்கும் பிக் பாஸ் இப்படி எல்லாம் சொல்லவில்லை. மேலும் virtual ஹக் கொடுத்து ஷாமாவை கண் கலங்க வைத்துவிட்டார் பிக் பாஸ்.

சாண்ட்ரா கருத்து: ஷாமா நல்ல போட்டியாளர் என்பது பிக் பாஸுக்கே தெரிந்தும் கூட எவிக்ஷன் நடந்திருக்கிறது. அது அநியாயமான எவிக்ஷன் என்றார்கள் அந்த நிகழ்ச்சியை 50 நாட்களுக்கும் மேலாக பார்த்து வருபவர்கள். இந்நிலையில் கடந்த சீசனில் கலந்து கொண்டு ஹவுஸ்மேட்ஸுக்கு டஃப் கொடுத்தசாண்ட்ராவும் ஷாமாவின் எவிக்ஷன் நியாயம் இல்லை என்று இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்ட் போட, அதை பலரும் ஷேர் செய்து நன்றி தெரிவித்துள்ளனர்.

சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்

இதற்கிடையே எவிக்ஷன் ஃப்ரீ பாஸ் வீணாகப் போனதில் ஷாமாவுக்கு வருத்தம் இருக்கிறதோ இல்லையோ நமக்கு எல்லாம் இருக்கிறது.

Source link