IND vs NZ 3rd T20 – எப்படி வென்றது இந்திய அணி? நியூசிலாந்து செய்த 3 முக்கிய தவறுகள் – how india team beat new zealand team by 6 wickets in 3rd t20i match

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், தொடர்ச்சியாக அபாரமாக விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி போராடி வென்ற நிலையில், மூன்றாவது போட்டி துவங்கியது.

இப்போட்டியில், முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி, 20 ஓவர்களில் 198/3 ரன்களை எடுத்த நிலையில், இந்திய அணி, 13.2 ஓவர்களில் 199/4 ரன்களை எடுத்து, 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.

இப்போட்டியில், நியூசிலாந்து அணி தோல்வியை சந்திக்க மூன்று முக்கிய காரணங்கள் இருக்கிறது. அதுகுறித்து பார்க்கலாம்.

1.நியூசிலாந்து பேட்டர்கள் சொதப்பல்: முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி, முதல் 13 ஓவர்களில் 135/3 என்ற நல்ல நிலையில் இருந்தது. அதன்பிறகு, விக்கெட்டையே இழக்கவில்லை. இப்படி, விக்கெட்களை இழக்காமல், கடைசி 7 ஓவர்களில் 63 ரன்களைதான் அடித்தனர். இதுதான் தோல்விக்கு மிகமுக்கிய காரணம், ஜாகப் மற்றும் டேரில் மிட்செல் ஆகியோர் அதிரடியாக ஆடவில்லை.

2.பிரேஸ்வெலை ஆட விடவில்லை: கடைசி நேரத்தில், டேரில் மிட்செல், மிகவும் சோர்வாக இருந்தார். அவரால் பெரிய ஷாட்களை அடிக்க முடியவில்லை. இதனால், ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் வெளியேறாமல் தொடர்ச்சியாக களத்தில் இருந்தார்.

இவரால், கடைசி 4 ஓவர்களில் 12 பந்தில் 19 ரன்களைதான் அடிக்க முடிந்தது. இதுவும் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. மிட்செல், டெத் ஓவரின்போது, ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் வெளியேறியிருந்தால், அதிரடியாக ஆடக் கூடிய பிரேவிஸ்வல் வந்திருப்பார். இதனால், ஸ்கோர் 220+ ரன்களை எட்டக் கூட வாய்ப்பு இருந்திருக்கும்.

3.பவர் பிளேவில் சொதப்பல்: நியூசிலாந்து அணி பௌலர்கள், பவர் பிளேவில் சிறப்பாக பந்துவீசவில்லை. முதல் 5 ஓவர்களிலேயே 100 ரன்களை அடிக்கவிட்டனர். இதுவும் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, முதல் ஓவரில், ஜாகப் துபி சிறப்பாக பந்துவீசவில்லை. 26 ரன்ளை வாரி வழங்கினார். இப்படி, முதல் ஓவரிலேயே அதிக ரன்கள் சென்றதும் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

நியூசிலாந்து இன்னிங்ஸ்: முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணியி், பின் ஆலன் 40 (25), டேரில் மிட்செல் 89 (52), பிவோன் ஜாகப்ஸ் 39 (23) ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர். இதனால், நியூசிலாந்து அணி, 20 ஓவர்களில் 198/3 ரன்களை அடித்தது.

இலக்கை துரத்திக் களமிறங்கிய இந்திய அணியில், ஓபனர்கள் வைபவ் சூர்யவன்ஷி மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் அபாரமாக செயல்பட்டு அசத்தினார்கள். சூர்யவன்ஷி, 19 பந்தில் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் உட்பட 45 ரன்களை குவித்த நிலையில், அபிஷேக் சர்மா, 38 பந்தில் 9 பவுண்டரி, 11 சிக்ஸர்கள் உட்பட 113 ரன்களை எடுத்து அசத்தினார்

இதனால், இந்திய அணி, 13.2 ஓவர்களில் 199/4 ரன்களை எடுத்து, 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. நியூசிலாந்து அணியில், சாண்ட்னர் மட்டுமே சிறப்பாக பந்துவீசினார். இவர், 3 ஓவர்களில் 17 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை எடுத்தார். மற்ற பௌலர்கள் அனைவரும் 13+ எகனாமியில்தான் பந்துவீசினார்கள்.

Source link