நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால், பல இடங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் காய்கறி வரத்து குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டில் சாம்பார் வெங்காயம் ஒரு கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயம் சில்லறை விற்பனையில் கிலோ ரூ.180-க்கு விற்கப்படுவதாக கூறப்படுகிறது.
விரல் ரேகை, ஃபேஸ் ஸ்கேன்; விசாவுக்கு வச்சான் பாரு ஆப்பு: இந்தியர்கள் தலையில் இடியை இறக்கிய ஆஸ்திரேலியா
இந்த விலை உயர்வு மக்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. மழையின் காரணமாக சாம்பார் வெங்காய வரத்து குறைந்ததால் தான் அதன் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக கோயம்பேடு சந்தை வெங்காய மொத்த வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் செளந்தராஜன் தெரிவித்துள்ளார்.
மேலும், சந்தைக்கு வழக்கமாக தினமும் சுமார் 20 லாரி சாம்பார் வெங்காயம் வரும் என்றும் மழையின் காரணமாக தற்போது அவை 10 முதல் 12 லாரிகளாக குறைந்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். வெங்காயம் மட்டும் இன்றி மற்ற காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது. அதன்படி, பீன்ஸ் ஒரு கிலோ 90 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பச்சை பட்டாணி ஒரு கிலோ 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
