தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். இவர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி உரிமையாளர் காவ்யா மாறனை காதலித்து வந்த நிலையில் குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்ய உள்ளார். இவர்களது திருமணம் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் கிரீஸ் நாட்டில் நடைபெற உள்ளது. தொடர்ந்து திருமண கொண்டாட்டங்கள் நவம்பர் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் கிரீஸ் நாட்டில் மிகவும் பிரத்யேகமாக நடைபெறவுள்ளது.
தனுஷ் கட்சி தொடங்குவது உறுதி; இந்தக் கட்சிக்குத் தான் அவர் போட்டி: ராஜேந்திர பாலாஜி பேட்டி
இந்த திருமண நிகழ்வில் இரு வீட்டாரின் நெருங்கிய சொந்தங்களும், சில முக்கிய நண்பர்களும் மட்டுமே பங்கேற்கின்றனர். விருந்தினர்களுக்கான விமானப் பயணம், தங்குமிடம் மற்றும் போக்குவரத்து வசதிகளை மாறன் குடும்பத்தினர் ஏற்பாடு செய்து வருகின்றனர். திருமணத்தைத் தொடர்ந்து, நவம்பர் 21-ம் தேதி சென்னையில் பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்த விழாவில் அரசியல், திரையுலகம், தொழில் துறை மற்றும் விளையாட்டுத் துறையைச் சேர்ந்த பல முன்னணி பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளனர். அதன்படி, பிரதமர் மோடி, சோனியா காந்தி, ராகுல் காந்தி, நிர்மலா சீதாராமன், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, அனிருத்தின் நெருங்கிய உறவினர் என்பதால் ரஜினிகாந்த் உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய பிரபலங்கள் காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், காவ்யா மாறன் – அனிருத் ஆகியோரின் திருமண வரவேற்பு அழைப்பிதழ் இணையத்தில் வைரலாகி உள்ளது. இதற்கு அதன் நேர்த்தியான வடிவமைப்பும், அழைக்கப்பட்டவர்களின் பிரமாண்டமான பட்டியலும் தான் காரணம் என்று கூறப்படுகிறது. அழைப்பிதழ் பெட்டியானது தங்கம் மற்றும் நீல நிறம் கலந்து உள்ளது. அது, நுணுக்கமான அலங்கார வடிவங்கள், தங்க வேலைப்பாடுகள் மற்றும் பழங்காலப் பாணி முத்திரைகளால் மெருகூட்டப்பட்டுள்ளது.
இந்த அழைப்பிதழ் நெட்டிசன்கள் பலரின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில் பலர் அதன் கம்பீரமான பாரம்பரியத் தோற்றத்தை பாராட்டி கமெண்ட் செய்து உள்ளனர். இந்த அழைப்பிதழ் தான் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது.
