நவ.1 முதல் ஜிஎஸ்டி சட்டத்தின் புதிய திருத்தங்கள் அமல்; நிதி அமைச்சகம் அறிவிப்பு

புதுடில்லி: நவம்பர் 1ம் தேதி முதல் ஜிஎஸ்டி சட்டத்தின் புதிய திருத்தங்கள் நடைமுறைக்கு வருகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, அரசிதழில் மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டு இருக்கிறது.

அக்டோபர் 8ம் தேதி டில்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 57வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஜிஎஸ்டியில் உள்ள முரண்பாடுகளை குறைக்க புதிய நடைமுறைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனால் வரி செலுத்துவோருக்கு நோட்டீஸ் அனுப்பப்படுவது குறையும் என்று எதிர்பார்ப்பு எழுந்தது.

இந் நிலையில் ஜிஎஸ்டி சட்டத்தின் 153 முதல் 155 வரையிலான புதிய திருத்தப் பிரிவுகள் நவ.1 முதல் நடைமுறைக்கு வருகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய நிதி அமைச்சகம் அரசிதழில் வெளியிட்டு இருக்கிறது.

இதனால் விற்பனைக்கு பிந்தைய தள்ளுபடிகளை கணக்கிட்டு வரி மதிப்பை குறைத்தல், கிரெடிட் நோட் வழங்குதல், தகுதியுள்ள நிறுவனங்களுக்கு பயன்படுத்தப்படாத உள்ளீட்டு வரிக்கடனில் 90 சதவீதம் திரும்ப பெறுதல், ஏற்றுமதி வரி திரும்ப பெறுதலில் சில வரம்புகளை நீக்குதல் போன்ற நடைமுறைகள் மிக எளிதாகும்.

Source link