எழுதியவர்:நவாஸ் ஜாவேத் கோச்ரா
தனது தாயார் ஸ்ரீதேவி இறந்தபோது தனது காதலன் ஷிகர் பஹாரியா ஒரு பாறை போல் தனக்கு உறுதுணையாக இருந்ததாக நடிகை ஜான்வி கபூர் மனம் திறந்து பேசியுள்ளார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்:
கரண் ஜோஹர் தொகுகுத்து வழங்கி வரும் காஃபி வித் கரண் சீசன் 9-ன் சமீபத்திய எபிசோட்டில், வருண் தவானுடன் பங்கேற்ற நடிகை ஜான்வி கபூர், 2018-ல் தனது தாயாரும் நடிகையுமான ஸ்ரீதேவி மறைந்தபோது, ஷிகர் தனக்கு ஒரு பாறை போல உறுதுணையாக நின்றதாக தனது வாழ்வில் மிகவும் உணர்ச்சிப்பூர்வமான ஒரு கடினமான காலத்தில் தனது காதலன் ஷிகர் பஹாரியா எந்தளவு முக்கிய பங்காற்றினார் என்பது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
ஸ்ரீதேவியின் மறைவின் போது ஷிகரின் தளராத ஆதரவு
கடநத 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், நடிகை ஸ்ரீதேவி துபாயில் உள்ள குளியலறையில் (பாத் டப்) தற்செயலாக மூழ்கி உயிரிழந்தார். அவரது திடீர் மறைவு திரைத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவரது மகள்களான ஜான்வி மற்றும் குஷி கபூருக்கு அது ஈடுசெய்ய முடியாத பெரும் துயரமான தருணமாக அமைந்தது.
அந்த காலகட்டத்தில் ஷிகர் பஹாரியா எப்படி தனக்கு பலமாக மாறி ஆதரவளித்தார் என்பதை பற்றி கூறிய ஜான்வி கபூர், “அவர் லண்டனில் படித்துக்கொண்டிருந்தார் என்று நினைக்கிறேன், அவர் அரை செமஸ்டர் விடுமுறை எடுத்துக்கொண்டு மும்பைக்கு வந்தார். அப்போது அவர் தனது தந்தையுடன் நகர்ப்பகுதியில் (டவுன்) தங்கியிருந்தார். ஆனால் அவர் ஜுஹூவில் உள்ள தனது நண்பரின் வீட்டிற்கு ஒரு மாதம் வந்து தங்கியிருந்தார் என்பதை நான் பின்னர்தான் அறிந்துகொண்டேன். நான் அவரை தினமும் பார்க்கவில்லை என்றாலும், ‘ஒருவேளை அவளுக்கு என் உதவி தேவைப்பட்டால், நான் அருகில் இருக்க வேண்டும்’ என்ற எண்ணத்திலேயே அவர் அவ்வாறு செய்தார் என்பதைப் பின்னர் தெரிந்துகொண்டேன்” என்று ஜான்வி கபூர் கூறியுள்ளார்.
2024-ல், ஜான்வி தனது சகோதரி குஷி கபூருடன் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது, தனது தாயாரின் மறைவை நினைவுகூர்ந்து உணர்ச்சிவசப்பட்டார். அப்போது ஜான்வி பகிர்ந்து கூறுகையில்’, “எனக்கு அந்த அழைப்பு வந்தபோது நான் என் அறையில் இருந்தேன். குஷியின் அறையிலிருந்து அழுகை சத்தம் கேட்டது. நான் கதறி அழுதுகொண்டே அவளுடைய அறைக்குள் ஓடினேன். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, அவள் என்னை பார்த்த அடுத்த கணமே முற்றிலும் அழுவதை நிறுத்திவிட்டாள். அவள் என் அருகில் அமர்ந்து என்னை ஆறுதல்படுத்தத் தொடங்கினாள். அதற்குப் பிறகு அவள் அழுததை நான் பார்த்ததே இல்லை என்று கூறியிருந்தார்.
ஜான்வி கபூர் – ஷிகர் பஹாரியா உறவு:
ஜான்வி கபூரும் ஷிகர் பஹாரியாவும் கடந்த சில ஆண்டுகளாகக் காதலித்து வருகின்றனர். ஜான்வி அவர்களின் உறவைப் பற்றி மிகவும் வெளிப்படையாகப் பேசி வந்தாலும், இந்த ஜோடி இதுவரை தங்களது காதலைப் பகிரங்கமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இத்தனை ஆண்டுகளில், அவர்கள் காதலிப்பதை மறுக்கவுமில்லை, ஏற்றுக்கொள்ளவுமில்லை. ஆனால் ஜான்வி பல நேர்காணல்களில் அவரைப் பற்றி வெளிப்படையாகப் பேசி வருகிறார்.
கடந்த ஏப்ரல் மாதம், ராஜ் ஷமானியுடனான ஒரு பாட்காஸ்ட்டின் போது, ஜான்வி ஷிகருடனான தனது பிணைப்பைப் பற்றியும், காதல் பற்றிய தன் பார்வையையும் பகிர்ந்துகொண்டார். அப்போது அவர், “காதல் பாதுகாப்பானதாக உணர்கிறது. நீங்கள் ஆராயும் இயலாமையைச் சமாளிக்க அது எனக்கு உதவியுள்ளது. அதுவே மிகப்பெரிய விஷயம். அவருடைய வருகையால் நான் இப்போது அவ்வளவு இயலாமையுடன் உணரவில்லை. எனது வாழ்க்கையில் அவருடைய இருப்பு எப்போதும் எனக்கு எனது இயலாமையை சரி செய்துள்ளது.
அது வெறும் அமைதி மட்டுமல்ல, பாதுகாப்பான இடம் என்று நான் சொல்லும்போது, என்னால் ஒரு குழந்தையாக இருக்க முடியும் என்று அர்த்தம். அவரைத் தவிர வேறு யாருடனும் நான் இவ்வளவு மகிழ்ச்சியாக இருந்ததில்லை. உங்களுக்குப் பொருத்தமான காதலை நீங்கள் கண்டுபிடிக்கும் போது, நீங்கள் உண்மையானவராக மாறுகிறீர்கள் என நினைக்கிறேன். காதலின் காரணமாக நான் என்னளவில் மிகவும் உண்மையானவளாக மாறியிருப்பதாக உணர்கிறேன். என் எண்ணங்களைக் கேட்கவும், என் எண்ணங்களை நம்பவும், என் குரலைப் பயன்படுத்தவும், நான் பலவீனமடையும் போது பிறரால் மதிப்பிடப்படவோ, தாழ்த்தப்படவோ அல்லது அநீதிக்கு ஆளாகவோ மாட்டேன் என்ற பாதுகாப்பான சூழலை அது எனக்கு அளித்துள்ளது” என்று கூறியிருந்தார்.
முன்னதாக மிர்ச்சி பிளஸ் (Mirchi Plus) நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலில், ஜான்வி ஷிகரைப் பற்றி பேசுகையில், “எனக்கு 15-16 வயது இருக்கும் போதிலிருந்தே அவர் என் வாழ்க்கையில் இருக்கிறார். என்னுடைய கனவுகள் எப்போதும் அவருடைய கனவுகளாகவும், அவருடைய கனவுகள் எப்போதும் என்னுடைய கனவுகளாகவும் இருந்துள்ளன என நினைக்கிறேன். நாங்கள் மிகவும் நெருக்கமாக இருந்திருக்கிறோம். ஒருவரை ஒருவர் வளர்த்தெடுத்தது போல, ஒருவருக்கொருவர் பக்கபலமாக இருந்துள்ளோம்” என்று கூறியுள்ளார்.
காஃபி வித் கரண் சீசன் 9-ன் இந்தச் சமீபத்திய எபிசோட்டில் ஜான்வியுடன் இணைந்து வருண் தவான் மற்றும் அர்ஜுன் கபூர் ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர். இந்த புதிய எபிசோடு புதன்கிழமை மாலை 7 மணிக்கு ஜியோஹாட்ஸ்டாரில் (JioHotstar) ஒளிபரப்பாகும்.
