தனுஷின் அடுத்தக்கட்டம்; பிரம்மாண்டமாக நடந்த பெண் நிர்வாகிகள் சந்திப்பு!

முதல்வர் விஜய்யை தொடர்ந்து நடிகர் தனுஷும் அரசியல் பிரவேசம் காணவுள்ளதாக தகவல் வெளியான வண்ணம் இருக்கிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் தனுஷின் செயல்பாடுகளும் அவரது அடுத்தக்கட்ட நடவடிக்கைகளும் அமைந்து வருகிறது. நற்பணி கொடி வைரல், பிரம்மாண்ட நிர்வாவிகள் சந்திப்பு, பிறந்தநாளில் வீட்டின் முன் குவிந்த ரசிகர்கள், நற்பணி மன்றத்தைத் தொகுதி வாரியாக வலுப்படுத்துதல், மன்றம் இயக்கமாக மாற்றப்பட்டது என இதில் அடங்கும். இதைத்தவிர்த்து டெல்லியில் முக்கிய புள்ளிகளை சந்தித்தல், கட்சி பெயரை பதிவு செய்தல் உள்ளிட்ட விஷயங்களும் நடந்ததாக கூறப்பட்டது. 

இதன் தொடர்ச்சியாக தற்போது நற்பணி இயக்கத்தின் மகளிர் அணி நிர்வாகிகளை தனுஷ் சந்தித்துள்ளார். சென்னை ஓஎம்​ஆர் சாலை​யில் உள்ள செம்​மஞ்​சேரி தனியார் கல்​லூரி​யில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 3,000-க்​கும் மேற்​பட்ட பெண்​கள் கலந்து கொண்டுள்ளனர். நிகழ்ச்சியின் வளாகத்தில் தனுஷை வரவேற்று பிரம்மாண்ட பேனர்கள், அரசியல் வசனங்களுடன் பதாகைகள் மற்றும் பெரிய பெரிய கட்டவுட்டுகள் என விழா கோலம் போல இருந்தது. இதில் ‘வருங்கால முதல்வரே’ என்ற பேனரும் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இந்நிகழ்ச்சியில் பெண்களை சந்தித்த தனுஷ், அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். மேலும் அவர்களுக்கு 20 கிராம் அளவிலான வெள்ளி விளக்கு பரிசாக அளித்தார். பின்பு மேடையில் பேசிய அவர், “நீங்கள் நன்றாக படிக்க வேண்டும். பெண்கள் முன்னேறினால் தான் நடு முன்னேறும். பெண்கள் படிப்பில் மட்டுமின்றி கலைத்துறைகளிலும் சாதிக்க வேண்டும்” என்றார். இந்நிகழ்ச்சி தனுஷ் அரசியலை மேலும் வலுப்படுத்தும் நிலையில் விரைவில் இது குறித்து விளக்கமளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.