சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான இண்டர்வியூ அக்டோபர் 31ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது.
தற்போது டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் Adobe Analytics பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு சில முக்கிய தகுதிகள் வேண்டும்.
அதன்படி விண்ணப்பம் செய்வோருக்கு கட்டாயமாக 5+ ஆண்டுகள் Adobe Launch-யை பயன்படுத்தி அடோப் அனலிட்டிக்ஸ் இன்டகிரேஷன் அனுபவம் இருக்க வேண்டும்.
அதேபோல் டெக்னிக்கல் அனலிசிஸ், டிசைன் மற்றும் டெவலப்மென்ட் உள்ளிட்டவற்றில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அடோப் டார்க்கெட் பர்சனலைசேஷன், ஏஇபி வெப் எஸ்டிகே இம்ளிமென்டேஷன், ஈவண்ட் டிரைவன் டேட்டா லேயர், குக்கி கான்ஸ்டண்ட் மேனேஜர் உள்ளிட்டவற்றில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
மேலும் Agile, Scrum மெத்தடாலஜிஸ், எஸ்டிஎல்சி உள்ளிட்டவற்றில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். மைக்ரோசாப்ட் ஆபிசில் (வேர்ட், எக்ஸல், பவர் பாயிண்ட், சேர் பாயிண்ட், விசியோ) உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். இதுதவிர இன்னும் சில முக்கிய தகுதிகள் வேண்டும். அது கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக சம்பந்தப்பட்ட பிரிவில் 8 ஆண்டு அல்லது அதற்கு மேல் பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம் மற்றும் திறமை அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.
இந்த பணிக்கான இண்டர்வியூ அக்டோபர் 31ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்போர் Tata Consultary Services, Ozone Techno Park, 24, Rajiv Gandhi Salai, Navalur, Chennai, Tamil Nadu 600 130 என்ற முகவரியில் இண்டர்வியூ நடைபெற உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
